இன்று காலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும் சவூதி வாசகர் ராம ஸ்ரீனிவாசன் அனுப்பியிருந்த இந்த இணைப்பைப் பார்த்தேன். அற்புதமான குரல். அருமையான சங்கீதம். ஆனால் கண்களைத் திறந்தபடி கேட்டால் செவிகள் அந்த அருமையான சங்கீதத்தைக் கேட்க மறுக்கின்றன. கண்களை மூடிக் கொண்டு தான் கேட்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட பேரழகிகள் தான் இந்தப் பூவுலகை இன்னமும் ரசிக்கத்தக்கதாக மாற்றுகிறார்கள். இவருக்கு (சங்கீதத்துக்கு என்று பாட பேதம்) அடிமையாகி விட்டேன்.