கள நிலவரம்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை நேற்று புத்தக விழா திறந்த முதல் நாளே பலர் வந்து கேட்டு விட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரதிகள் அச்சகத்திலிருந்து வந்து விடும் என்பது தற்போதைய செய்தி. தற்போது என்றால், 25 ஃபெப்ருவரி 2021 காலை பத்தேகால். இந்த நேரத்திலேயே போன் போட்டு புத்தகம் வந்து விட்டதா என்று டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதால் பதினோரு மணிக்குக் கேட்கலாம் என்று இருக்கிறேன். பதினோரு மணிக்கு அடுத்த செய்தியைத் தருகிறேன். கிடைத்து விட்டால் உடனடியாக முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். உடனடியாக புத்தக விழா ஸீரோ டிகிரி அரங்கம் 10 & 11 இலும் கிடைக்கும். எல்லாவற்றையும் விட மேலாக நாவல் பற்றி உங்கள் அபிப்பிராயத்தை அறிய மிக மிக ஆவலாக இருக்கிறேன். அதுதான் எனக்கு ஆக முக்கியம்.

பொதுவாக என் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் எதையும் exaggerate செய்கிறேன் என்று. அந்தப் பழி இப்போதாவது தீர வேண்டும். நீங்கள் சொன்னது கம்மி என்ற பெயர் வர வேண்டும். நிச்சயம் வரும்.

அப்படியே என்னுடைய புத்தகமான லத்தீன் அமெரிக்க சினிமாவுக்கும் கொஞ்சம் ஆதரவு தாருங்கள்.