தாடி

இன்றைய நிலையில் எல்லா எழுத்தாளர்களின் – அல்லது பல எழுத்தாளர்களின் எண்ணம், ஜெயமோகனை விட அதிகம் எழுதி விட வேண்டும் என்பது.  எனக்கு அந்த எண்ணமெல்லாம் கிடையாது.  என்னுடைய ஒரே தலைவன் பெருமாள் முருகன்தான்.   அந்தத் தலைவன் புக்கரை அடைவதற்குள் நாம் அந்தப் பக்கம் தலைகாட்டி விட வேண்டும். ஆனால் இடையிடையே ஜெயமோகனின் எண்ணமும் வரும்.  பக்க எண்ணிக்கை பற்றி அல்ல.  அவரது வாசகர் எண்ணிக்கை பற்றி.  உடனேயே ஜக்கியின் எண்ணம் வந்து அதை முழுங்கி விடும்.  … Read more

புனித அங்கியும் கொஞ்சம் பணமும்…

என்னுடைய பல வாசகர்களில் கிருஷ்ணனும் ஒருவர்.  உண்மைப் பெயர் வேறு.  உண்மையான பெயரை அனுமதி இல்லாமல் சொல்வதில்லை.  என்னைத் தீவிரமாக வாசிப்பவர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது.  அதைத் தெரிந்து கொள்ளவும் வழியில்லை.  நான்கு ஆண்டுகள் குமுதத்தில் எழுதியதால் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  ஆனால் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நாவல்களோ மற்ற புத்தகங்களோ பரிச்சயமில்லை.  எல்லாம் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்திருக்க வேண்டும்.  எனக்கு அறுபத்தெட்டில் ஆரம்பிக்கிறது.  கிருஷ்ணன் என் தீவிரமான வாசகர்களில் ஒருவர்.  வளன் அரசுவைப் … Read more

தலைப்பில்லாத குறுங்கதை: காயத்ரி ஆர்.

“பெஸ்ட் மாம்பழம் ஆஃப் த இயர்” என்று சப்புக் கொட்டிக்கொண்டு என் கணவர் சாப்பிடவும் ஆசையாக நானும் ஒரு துண்டு வாயில் போட்டுக் கொண்டபோதுதான் சனி இன்னும் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டிருந்தது உறுதியாயிற்று. எனக்கு அந்தத் துண்டில் ஆரஞ்சு வாசனை வந்தது. பெருங்காயத்தில் முட்டைக்கோஸ் வாசனை வந்தது. சாக்லேட்டில் தீய்ந்த வாசனை. எல்லா பதார்த்தங்களின் வாசனையும் வேறாகிப் போனது. எல்லோரிடமும் புலம்பிப் புலம்பி எனக்கு மாளவில்லை. எதையாவது சாப்பிட்டால் மாறும் என் முகபாவத்திற்காக சுற்றியிருப்பவர்கள் ஆர்வமாக … Read more

நான்தான் ஔரங்கசீப்…(எதிர்பாராதது)

பின்வரும் மதிப்புரை முகநூலில் செந்தில் நாதன் எழுதியது.  சாரு எழுதும் புதிய நாவல். சாருவிடம் இருக்கும் ஒரு தனிச்சிறப்பு எது என்று கேட்டால், இதற்கு இது தான் வரையறை என்று இந்த உலகம், இந்த சமூகம் சொல்லும் போது அதை உடைக்கும் வகையில் ஒன்றை அறிமுகபடுத்தும் செயல் என்று தான் சொல்ல வேண்டும். வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்றுக் கதைகள், வரலாற்று நாவல்கள் என்று வந்தால் ஒரே மாதிரியான முறையில் கதை சொல்லல் இருக்கும். கொஞ்சம் படித்தால் போதும், … Read more

நான் கடவுள் – நீ பக்தன்’ – ‘ரஜினி’ சாமி

பொருள்வெளிப் பயணம் – 5 ரஜினிகாந்தின் ‘சிம்ப்ளிசிட்டி’ பிம்பத்தை உடைத்து இருக்கிறார்,எழுத்தாளர் -சாரு நிவேதிதா.’பொருள் வெளிப் பயணம்’தொடர். www.bittalk.in

அக்பரும் ஔரங்கசீப்பும்…

அன்பு சாரு சார், வணக்கம் நலமா? தாங்கள் பல இடங்களில் கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று அகோராவை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தீர்கள். முதன் முதலாக நீங்கள் தமிழ்ச் சூழலில் அகோராவைப் பற்றி அறிமுகப்படுத்துகிறீர்கள். புத்தாண்டுக் குறிப்பில் மிகவும் சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அப்போதிலிருந்து இந்தப் புத்தகத்தை எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற ஆவல் தொற்றிக்கொண்டது. கடந்த மாதம்தான் எனக்கு திருமணம் நடந்தது. திருமணப் பரிசாக நண்பர்களிடமிருந்து அகோராவைப் பெற்றேன். நிச்சயமாக அனைத்து புத்தகங்களுக்கும் சிகரம் என்று கூறலாம். இந்தப் புத்தகத்தைப் … Read more