ஏழ்மையைப் போற்றுதல் இலமே – 2

நாளை மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். கேள்வி பதில். முதல் பதினைந்து நிமிடங்களில் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள். www.bittalk.in இல் ஏழ்மையைப் போற்றுதல் இலமே இரண்டாவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. முதல் அத்தியாயத்தை 42000 பேர் படித்திருப்பதாக அதன் ஆசிரியர் சொன்னார். புத்தகமாகப் போட்டால் இவர்களெல்லாம் எங்கே ஓடி ஒளிந்து விடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. 200 பிரதிதான் அதிக பட்சம் போகிறது. ஔரங்கசீப் 17 அத்தியாயங்களை எழுதி முடித்து … Read more

தொலைபேசி

எனக்குத் தெரிந்த அத்தனை எழுத்தாளர் நண்பர்களுக்கும் நான் ஏதாவது ஒரு சமயத்தில் ஃபோன் செய்தால் அவர்கள் அதை எடுப்பதில்லை.  சரி, அவர்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.  பலரும் எழுதும்போது ஃபோனை எடுப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே 36 மணி நேரம் கழித்துத்தான் ஃபோன் செய்கிறார்கள்.  அல்லது, மெஸேஜ் அனுப்புகிறார்கள்.  குறைந்தது 36 மணி நேரம்.  ஒருநாள் காலை பத்து மணி அளவில் ஸக்கரியாவுக்கு ஃபோன் செய்தேன்.  எடுக்கவில்லை.  அதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.  … Read more

க்ளப் ஹவுஸ் உரையாடல்

வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலமாக க்ளப் ஹவுஸில் உரையாட இருக்கிறேன். சக எழுத்தாளர்கள் பற்றிய கேள்விகள் இருந்தால் கேட்க வேண்டாம். தமிழ் சினிமா பற்றிய கேள்விகளுக்கும் பதில் சொல்ல மாட்டேன். https://www.clubhouse.com/join/zero-degree-publishing/hqen5nVt/xkjKqWlD?fbclid=IwAR2WShlslmTIBfhuAnJkFGeGjglBtqE75PhZodwNfcY-Vkp4HwY3A1Z045k

சமகாலத் தமிழ் இலக்கியச் சூழல்

ஜெயமோகனின் வாசகர்கள் என்றுதான் இதற்கு நான் தலைப்பிட்டிருக்க வேண்டும். இருந்தாலும் அந்தத் தலைப்பு பலவித ஹேஷ்யங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் இப்படி ஒரு தலைப்பு வைத்தேன். செய்வதற்கு எனக்குப் பல வேலைகள் உள்ளன. இரவு பகலாகக் கண் விழித்து ஔரங்கசீப் எழுதிக் கொண்டிருக்கிறேன். முந்தாநாள் இரவு பன்னிரண்டு மணிக்கு சீனியை அழைத்தேன். மிரண்டு போனார். இதுதாங்க, ராப்பகலா எழுதுறதுங்கிறது என்றேன். பழைய ராணுவ ஒழுங்கு எதுவும் இல்லை. நாவல் எழுதும்போது நேர ஒழுங்கு உட்பட எந்த ஒழுங்கையும் … Read more

எஃபத்தா : சிறுகதை : வளன்

“இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமானவரிடம் ‘எஃபத்தா’ அதாவது ‘திறக்கப்படு’ என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது.” (மாற்கு 7: 34-35) கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு டார்ச்செஸ்டர் பகுதியை இரண்டாகப் பிரித்து வைத்திருக்கிறது. இங்கு வாழும் யாவருக்கும் இது தெரியும். நகரின் கிழக்குப் பகுதி நல்ல டார்ச்செஸ்டர் எனவும், மேற்குப் பகுதி தீய டார்ச்செஸ்டர் எனவும் அறியப்படுகிறது. இது எப்படி தீர்மானிக்கப்படுகிறது என்றால் குற்றச் செயல்களின் எண்ணிக்கையை வைத்து. … Read more