முகமூடிகளின் பள்ளத்தாக்கு – ஒரு மதிப்புரை

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சாரு அவர்களுக்கு, இது தங்களுக்கு நான் எழுதும் முதல் வாசகர் கடிதம். கடந்த ஐந்து வருடங்களாக, சரியாகச் சொல்வதானால் என் கல்லூரியின் தொடக்க நாட்களிலிருந்து தங்களின் தீவிர வாசகன்.  தற்போது குடிமைப்பணித் தேர்வுக்காக தயார் செய்துகொண்டிருக்கின்றேன்.  உங்களது படைப்புகள் என்னில், எனது சிந்தையில், உலகை அணுகும்  பார்வையில், பிறவுயிரிகளை நேசிப்பதில் என்று அவை ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் அனேகம். அதைப் பற்றியெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் … Read more

எக்ஸைல்

ஸீரோ டிகிரி ஒரு cult நாவலாக மாறி விட்டது.  எப்படியும் ஒரு ஆண்டில் எழுநூறு எண்ணூறு பிரதிகள் போய் விடுகின்றன.  எனக்கு வரும் ராயல்டி ஸ்டேட்மெண்ட்டில் எப்போதுமே அதிகம் விற்ற புத்தகமாக ஸீரோ டிகிரிதான் இருக்கிறது.  அடுத்து, நண்பர்களிடையே பேசும்போது அவர்கள் அதிகம் குறிப்பிடுவதும் சிலாகிப்பதும் ராஸ லீலா.  யாருமே குறிப்பிடாத நாவல் காமரூப கதைகள்.  புறக்கணிக்கப்பட்ட நாவல் அது.  அடுத்து, யாரும் படிக்காத நாவல் என்று எக்ஸைலைச் சொல்லலாம்.  எப்போதுமே ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு.  ஸ்ரீராம் … Read more

தம்ரூட்டை முன்வைத்து ஒரு நீதிக்கதை (சிறுகதை)

நீதிக்கதை என்றால் ஒரு பக்கம் ரெண்டு பக்கம் இருக்கும்.  ஆனால் தருண் தேஜ்பால் எழுதிய நீதிக்கதை அறுநூறு பக்கம்.  பெரிய சாதனைதான்.  அதுவும் ஒரு நீதிக்கதையை த்ரில்லர் மாதிரி சொல்ல வேண்டுமானால் அதற்கு பயங்கரமான திறமை வேண்டும்.  பல வாசகர்கள் இலக்கியம் என்றால் நாட்டுக்கும் வீட்டுக்கும் நாலு நல்லதைச் சொல்ல வேண்டாமா என்றே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற எழுத்தாளர் ஜெயமோகன். ஆனால் நமக்கே நல்லது எது கெட்டது எது என்று தெரியாதபோது நம்மால் எப்படி … Read more

யார் அந்த மூன்று பேர்?

ஜெயமோகனின் ஓஷோ பற்றிய பேருரையில் ஓஷோ அளவுக்குப் பிரபலமான மூன்று தமிழ் எழுத்தாளர்கள் என்று கூறுகிறார். கிசுகிசுவில் நான் தான் ரொம்ப வீக். ஜெயமோகன் சொல்லும் கிசுகிசுக்களுக்கு க்ளூவே தர மாட்டார். சுத்தமாகத் தொங்கலில் நிற்கும். நான் தரும் க்ளூக்களை வைத்துக் கண்டு பிடிக்க முடியாது என்றாலும் சில அசகாய சூரர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். இப்போது ஜெயமோகன் சொன்ன மேற்படி கிசுகிசுவால் காலையிலிருந்து மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். மூவரில் ஒருவரைக் கண்டு பிடிக்க முடிகிறது. அது … Read more

தம்ரூட் – சிறுகதை – மேலும் சில எதிர்வினைகள்

தருமபுரி, 12..03..21 சற்றே நீண்ட கடிதம். பொறுத்துக் கொள்ளுங்கள். அன்புள்ள சாரு, இக்கடிதம் பல நாட்களுக்கு முன்பாகவே தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது.  என்னுடைய 59 வயதில் நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தினை எழுதுகிறேன். தங்களது வலைப்பக்கத்தில்தான் எனது நாள் துவங்குகிறது. இது எனது வழக்கம். சில நாட்களுக்கு முன்பாக வளனது கடிதத்தினைப் படித்தேன். அது அளித்த உந்துதலே இக்கடிதம். தங்களது எழுத்து யாருக்கு வாழ்வின் எப்பக்கத்தையெல்லாம் திறக்க வைக்கிறது என்பதற்கு வளனின் கடிதம் ஒரு சிறந்த உதாரணம். … Read more

தம்ரூட் சிறுகதை – சில எதிர்வினைகள்

ஸ்ரீராம், என் சிறுகதைகளைத் தொகுக்கும்போது அந்தக் கதைக்கு வந்த எல்லா எதிர்வினைகளையும் தொகுத்து விடுங்கள்.  தொகுப்போடு வந்தால் சரியாக இருக்கும்.  இன்னும் பல எதிர்வினைகள் வந்தன.  அவற்றில் அ. மார்க்ஸ் அவர் தளத்தில் எழுதியிருந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக்.  என்ன இருந்தாலும் பின்நவீனத்துவவாதி அல்லவா? * * * இன்று மாலை சாரு நிவேதிதாவின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள  “நமக்கு வாய்த்தது” என்ற சிறுகதையில் சில வரிகள்: * * * “ஆனா அது ஒரு பெரிய வேலை.  அ. … Read more