ரோஹிணி மணியின் ஓவியங்கள்

முன்பெல்லாம் புத்தக அட்டைகளுக்கு எழுத்தாளர்கள் ரொம்பவே மெனக்கெடுவார்கள். இப்போதும் அப்படித்தான் மெனக்கெடுகிறார்கள். ஆனால் இப்போது ஓவியர்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது. கிட்டத்தட்ட இரண்டு இனமும் ஒன்றை ஒன்று அறியாத வேற்றுக் கிரகவாசிகளாகவே ஆகி விட்டனர். முன்பு கிருஷ்ணமூர்த்தி தான் எல்லா புத்தகங்களுக்கும் அட்டை போடுவார். அவருடைய ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலை போகும். ஆதிமூலம் இன்னும் மேலே. இன்னமுமே அவர் ஓவியங்கள் லட்சக்கணக்கான ரூபாய் விலைக்குத்தான் விற்கின்றன. சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர். தன்னை … Read more

சினிமா விமர்சனம்

வணக்கம். உங்கள் எழுத்து எனக்குப் பிடிக்கும். இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல். கர்ணன் திரைப்படம் பற்றிய உங்கள் கருத்தை உங்கள் ப்ளாகில் சில தினங்களாகத் தேடிக் கொண்டிருந்தேன். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. சரத் டியர் சரத், என் நண்பரும் நானும் மொழிபெயர்த்த முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் பற்றிய கருத்தை நண்பர் மாரி செல்வராஜிடம் கேட்டீர்களா? சாரு

இளமை ரகசியம் – 1

சில தினங்களுக்கு முன் பதிவேற்றம் செய்த இந்தக் கட்டுரையை இன்று பார்க்கும்போது தளத்தில் காணவில்லை. காரணம் புரியவில்லை. எனவே மீண்டும் பதிவிடுகிறேன். டியர் சாரு, உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும் ரகசியம் என்ன? 25 வயதில் சொத்தைப் பற்கள் மற்றும் 35 வயது தோற்றத்தில் இருக்கிறேன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன? உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களுக்கு முதல் கடிதம் எழுதுகிறேன்; தவறு இருந்தால் மன்னிக்கவும். இப்படிக்கு, மூர்த்தி.  மூர்த்தி, உங்கள் பின்னணி பற்றித் தெரியவில்லை.  … Read more

கர்ம யோகிக்குக் கிடைத்த விருது பார்சல்…

சுருக்கமாக எழுதவே முயற்சிக்கிறேன்.  இப்போது நான் எழுதப் போகும் குறிப்பை என் நண்பர்கள் காயத்ரியோ ராம்ஜியோ விரும்ப மாட்டார்கள்.  ஏன், நானே கூட காலையிலிருந்து எழுதவில்லை.  ஆனாலும் சமூக அநீதிகளைக் கண்டித்து எழுதுவதைப் போலவே எனக்கு ஒரு அநீதி நடந்தாலும் எழுத வேண்டியது என் கடமைதான் என்று நினைக்கிறேன்.  உதாரணமாக, டிஎம் கிருஷ்ணாவின் சமீபத்திய அட்ராசிட்டி பற்றி நாளை ஒரு பத்திரிகைக்கு எழுதப் போகிறேன்.  அதைப் போன்றதுதான் இப்போது நான் எழுதுவதும்.  அது கர்னாடக சங்கீதத்துக்கு நடந்திருக்கும் … Read more