கொழுந்து விட்டு எரியும் பிரச்சினை

வட இந்தியாவில் கொழுந்து விட்டு எரியும் ஒரு பிரச்சினை பற்றி Deccan Chronicle, The Asian Age (London and All India edition) இல் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும். http://www.asianage.com/columnists/honey-trapping-raunchy-numbers-076

அபிராமி

நாகேஸ்வர ராவ் பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு சரியாக காலை எட்டு மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவனும் நானும் பூங்காவை அடுத்து உள்ள மஹாமுத்ரா உணவகத்துக்கு காப்பிக்குப் போய் விடுவோம்.  நாங்கள்தான் எப்போதும் முதல் வாடிக்கையாளர்கள்.  அன்றைய தினம் காலையில் வாக்கிங் போக முடியாததால் மாலை ஆறு மணி அளவில் போனேன். மாலை நேரமாதலால் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  இந்தியாவில் சமையல் வேலை உட்பட வீட்டு வேலைகள் யாவும் பெண்களே செய்வதால் அவர்களால் காலையில் வர முடிவதில்லை … Read more

Schindler’s list

shindler’s list படத்தைப் பற்றி வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு win tv இல் பேசுகிறேன்.  ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் உலகின் மிக முக்கியமான நூறு படங்களில் ஒன்று.  என்னால் மறக்கவே முடியாத படம்.

அன்பும் சமாதானமும் பெருக…

நான் ஒருவரைப் புண்படுத்தி விட்டேன் என்று தெரிந்தால் அவரிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டு விடுவேன்.  உங்களில் எத்தனை பேர் அப்படி இருக்கிறீர்கள்?  உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.  பலரிடம் அந்த குணம் இல்லாததை கவனித்திருக்கிறேன்.  நாம் செய்தது தவறு என்று தெரிந்தும் வருத்தம் தெரிவிக்காத பலரை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  வருத்தம் தெரிவித்தால் அந்தத் தவறின் பலு நம்மை விட்டு அகன்று விடும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.  இன்னொரு முறை இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தவறை செய்யாத … Read more