2. இன்று pet shop செல்ல வேண்டும்…

கடந்த மார்ச்சிலிருந்து வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை.  ஏப்ரல் மாதமோ என்னவோ ஒருநாள் காய்கறிக் கடைக்கு செல்ல வேண்டி வந்தது.  திருவிழாக் கூட்டம். என்னதான் residency on earth எவ்வளவு காலம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நான் நம்பினாலும் இந்த மண்ணில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்பதால் ஆபத்தை விலைக்கு வாங்க விருப்பம் இல்லை. அதனால் கடைக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டாள் அவந்திகா.  எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு மேனேஜரும் பணியாளர்களும் சமயங்களில் … Read more

ஷோபா சக்தியின் இச்சா

ஷோபா சக்தியின் இச்சா நாவலுக்கு கடைந்தெடுத்த கயவாளித்தனமான ஒரு மதிப்புரை பார்த்தேன். ஒரு இலக்கியப் பத்திரிகையில். இலக்கியம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு பல சமூக விரோதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புரை எழுதியவரை விட அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் சமூகத்துக்கு அபாயகரமானவர்கள் என்று தோன்றுகிறது. சமூகம் ரேப்பிஸ்டுகளால் நிரம்பியிருப்பது போல் இலக்கிய உலகம் ரவுடிகளாலும் லும்பன்களாலும் சமூக விரோதிகளாலும் நிரம்பியிருக்கிறது.

கௌஹர் ஜான்

1902 நவம்பர் 14-ஆம் தேதி.  கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது.  இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது.  அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை.  சினிமாப் பாட்டு அல்ல.  அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம்.   தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான்.  இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய … Read more

ஆ. மாதவன்

December 20, 2015 தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன்.  பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன்.  ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன்.  ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார்.  அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன்.  இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே … Read more

2. சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா

இன்று ஒரு பிரபல பில்டர் போன் செய்து உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் சார் என்றார். ரொம்ப நாளாக எனக்கு சிவப்பு நிற பால் பாய்ண்ட் பேனா தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதுகிறேன். ஒரு நண்பர் நோட்டுப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து விட்டார். நாலு நோட்டு ஆர்டர் பண்ணி ஒண்ணுதான் வந்தது. மூணுக்கு புகார் செய்திருக்கிறார். அமேஸான். ஆக, இன்றைய தேவை சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா. அதைக் கேட்டேன். நாளை … Read more

நாகார்ஜுனர் – அபிலாஷ்

தமிழ்நாட்டில் செக்ஸ் ஸ்டார்வேஷன் பற்றித்தான் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஃபிலாசஃபி ஸ்டார்வேஷனும் இந்த அளவுக்கு இருந்திருக்கிறதா என்கிற அளவில் பிய்த்துக் கொண்டு போகிறது அபிலாஷின் நாகார்ஜுனா தத்துவ விவாதம். அபிலாஷ் நாகார்ஜுனரின் Mulamadyamakakarika என்ற நூலைப் பற்றி தினமும் அரை மணி நேரம் உரையாற்றப் போகிறேன் என்று சொன்னதும் புத்தாண்டு தினத்தில் ஏன் இந்த சோகச் செய்தி என்றே முதலில் நினைத்தேன். முதலில் அந்த நூலின் பெயரையே சரியா உச்சரிக்க வராதே? சம்ஸ்கிருதத்தில் பிரித்துப் பிரித்துப் போட … Read more