188. ராம்ஜிக்கு ஒரு கடிதம்…

ஸீரோ டிகிரி பதிப்பக பார்ட்னரும் என் ஆருயிர் நண்பருமான ராம்ஜிக்கு, நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன் ராம்ஜி.  இதை நான் உங்களுக்கு ஒரு போன் போட்டுக் கூட சொல்லியிருக்கலாம்.  அப்படிச் சொன்னால் அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விடுவீர்கள் என்பதால் இப்படி ஒரு பகிரங்கக் கடிதமாக எழுதத் துணிந்தேன்.  விஷயம் இதுதான்.  ரொம்ப சிம்பிள்.  ஆனால் ரொம்பக் கஷ்டம்.  நானும் நேர்வழியில் செல்ல எத்தனையோ முயற்சி பண்ணினேன்.  45 ஆண்டுகளாக முயற்சி பண்ணினேன்.  தெய்வத்தால் ஆகாது … Read more

Farewell, Damascus

Farewell, Damascus என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Ghada al-Samman எழுதியது. இதில் பல வாசகங்கள் நான் உணர்ந்ததைப் போலவே இருந்தன. இவர் என் நண்பரும் கூட. இந்த நாவல் அவருடைய இள வயது அனுபவங்களைச் சொல்வது. கிட்டத்தட்ட சுயசரிதை. அதில் ஒரு வாக்கியம்: The things you write shake people up, scare them. It isn’t that they hate you. In fact, what you say arouses their … Read more

186. இசையும் கொண்டாட்டமும்

பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஹேங் ஓவர் நேற்று வரை நீடித்தது.  எல்லாம் ஓய்ந்தது என்று வேலையைத் தொடங்கிய போது சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து வந்தது.  சுநீல் கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது பற்றிய வருத்தத்துடன் சென்ற ஆண்டுதான் அவருடைய நூல்களை வாங்கி வந்தேன்.  எடுத்திருக்கும் வேலையை முடித்து விட்டு அவரை வாசிக்க வேண்டும்.  இடையில் அவருடைய தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசித்தபோது எக்ஸைல் நாவலின் அடியோட்டமாக நான் தொட்டிருக்கும் … Read more

வித்தியாசமான நாள்

இந்த ஆண்டுப் பிறந்த நாள் மிக வித்தியாசமாகக் கடந்தது. வைன் இல்லாதபடி. நண்பர்களை virtual-ஆகப் பார்த்தபடி. வீட்டில் இருந்தபடியே. ஒருபோதும் இப்படி வீட்டிலேயே இருந்ததில்லை. எல்லாம் கொரோனா. என் சகா கிம் கி டுக்கும் போய் விட்ட பிறகு இன்னும் உஷாராக வேண்டி வந்து விட்டது. மார்ஷல் ஆர்ட்ஸ் வீரன். ப்ரூஸ்லீ மாதிரி இருப்பான். ஸ்ப்ரிங் ஸம்மர் படத்தின் அசகாயசூரன் கிம் கி டுக் தான் என்பது பலரும் அறியாதது. பலரும் அவனை இயக்குனர் என்றே அறிவர். … Read more

என் எழுத்து பற்றிய மிகச் சிறந்த ஆய்வு

இதுவரை என் எழுத்து பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். முதலில் எழுதியவர்கள் ஜமாலன், நாகார்ச்சுனன். பிறகு இந்திரா பார்த்தசாரதி. அ. மார்க்ஸ். அதற்குப் பிறகு சிலர். இவர்கள் அத்தனை பேரையும் நான் எப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்ப்பதுண்டு. சென்ற ஆண்டு புத்தக விழாவின்போது எஸ். சண்முகத்துடன் ஜமாலனைப் பார்த்த போது அது ஜமாலன் என்று தெரியாமல் விட்டு விட்டேன். பிறகுதான் சண்முகம் சொன்ன போது அடடா, பேசாமல் போனோமே என்று மிகவும் வருத்தப்பட்டேன். போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம். அதையும் … Read more

எழுத்தறிவித்தவன்

அன்புள்ள சாரு ,  வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்கு முக்கிய காரணமே நீங்கள் தான். 15 அல்லது 16 வயது இருக்குமென்று நினைக்கிறேன் முதன் முதலில் தேகத்தை கையில் ஏந்திய போது , என்ன இது அடல்ட் கண்டன்ட் நாவல் போலிருக்கிறதே என்று தான் வாசிக்க ஆரம்பித்தேன். அந்த வயதில் அது எதைப்பற்றிப் பேசுகின்றதென்று சுத்தமாகப் புரியவில்லை ஆனாலும் அது எழுதப்பட்டிருந்த விதம் என்னை அப்போது வாசிக்கத் தூண்டியது. அப்போதிருந்தே தேகம் என்பது மனதில் பதிந்த ஒரு … Read more