அரசு பயங்கரவாதம்

தன்னை நிர்வாணமாகப் படம் வரைந்த கேலிச் சித்திரக்காரரை போலீஸை விட்டுக் கைது செய்திருக்கிறார் நெல்லை கலெக்டர். அவரே செய்யவில்லை. அவர் புகார் மட்டுமே கொடுத்தார். போலீஸ் நடவடிக்கை எடுத்தது. என்ன வேகம் பாருங்கள்! இந்த வேகத்தை இசக்கிமுத்துவின் புகார் மீது காட்ட வேண்டியதுதானே ஐயா? ஆக, ஆள்பவனுக்கு ஒரு சட்டம். ஆண்டிக்கு ஒரு சட்டம். அப்படித்தானே? அதை ஒத்துக் கொள்ளுங்கள். ஏன் இப்படி அரசியல் நிர்ணயச் சட்டத்தையெல்லாம் மேற்கோள் காட்டி நாடகம் ஆடுகிறீர்கள்? சரி, அம்மணமாகப் படம் … Read more

வாழ்வும் இலக்கியமும்

சமயங்களில் நண்பர்கள் கேட்பதுண்டு, ஹெடோனிசம் என்று சொல்லி விட்டு ஏதோ ஆன்மீக சமாச்சாரங்களைப் பற்றி எழுதுகிறீர்கள், என்ன விஷயம்? ஹெடோனிசம் என்றால் வாழ்க்கையைக் கொண்டாடுதல். ஒரு மனிதனை அரசு சிறையில் போட்டு விட்டது; அவன் எப்படிக் கொண்டாடுவான்? கொண்டாட முடியும். அந்தச் சிறை வாழ்க்கையையே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் முடியும். 1972- ஆம் ஆண்டு. மொராக்கோ மன்னர் இரண்டாம் ஹசன் தனது 42-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே சில ராணுவ லாரிகள் … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே… (2)

சென்ற கட்டுரை பலரையும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்.  ஏகப்பட்ட கடிதங்கள்.  மற்றொரு விஷயத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இப்படியெல்லாம் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும், அகந்தையே இல்லாமலும் இருப்பதால் ‘கேணை’யாக இருக்க வேண்டும் என்பதில்லை.  வேலையில் கடுமையாகவே இருங்கள்.  இல்லாவிட்டால் ஏய்த்து விடுவார்கள்.  நான் அதில் சமரசமே செய்து கொள்வதில்லை.  வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வந்தால் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும்.  யாருக்காவது காய்கறி நறுக்கத் தெரியாவிட்டால் அவர் வீட்டைச் சுத்தம் செய்யலாம். … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே…

இந்தக் கட்டுரையை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது.  மறந்தால் நஷ்டம் எனக்கில்லை.  இந்தக் கட்டுரையை உங்கள் சந்ததிக்கும் சொன்னீர்களானால் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் வரும் தலைமுறைக்கும் அது நன்மை செய்யும்.  பொதுவாக என்னைப் பற்றிப் பொதுவெளியில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.  அது பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை.  ஞானியும் பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருப்பார்கள்.  எனக்கு நான் யார் என்று தெரியும்.  உங்களுக்கு நான் எப்படித் தெரிகிறேன் என்பது குறித்து எனக்குக் … Read more

sultans of swing

Marginal Man நாவலை எடிட் செய்து கொண்டிருக்கிறேன்.  அதில் வரும் நாயகனும் நாயகியும் ஒவ்வொரு கலவியின் முடிவிலும் இசையில் மூழ்கித் திளைக்கிறார்கள்.  அதில் இந்தப் பாடலும் ஒன்று.  இதில் வரும் கிதார் ஒரு அற்புதமான கலவியின் நரம்பு அதிர்வுகளோடு தொடர்பு உடையது.  நான் சொல்வதை நம்ப முடியாவிட்டால் நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம்.  அதிலும் பாடலின் முடிவில் கிதார் நரம்புகள் துடித்துக் கொண்டே இருப்பது ஆர்கஸத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே போவது போல இருக்கும்…

நிலவு தேயாத தேசம்

Zero Degree Publishing மூலமாக என்னுடைய பயண நூலான நிலவு தேயாத தேசம் வரும் ஜனவரியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகிறது. தமிழில் 400 பக்கங்கள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் காயத்ரி ஆர் மற்றும் ராம்ஜி நரசிம்மன். அந்த நூலை ஆங்கிலத்திலும் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட இருவருக்கும் என் நன்றி. இந்த நூல் துருக்கி அரசால் வரவேற்கப்படுமா என்று கேட்டார் ராம்ஜி. எழுத்தாளர்களை எதிர்கொள்வதில் துருக்கிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.  தமிழ்நாட்டில் கமல்ஹாசன், … Read more