உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம்

உயிர்மை சிறப்பு உறுப்பினர் திட்டம் ரூ 5000 செலுத்துங்கள். மாபெரும் சலுகைகளை பெறுங்கள். அழையுங்கள் +91- 9003218208   வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க உயிர்மை உறுப்பினர் திட்டத்தை அறிவிக்கிறது. உயிர்மைக்கு 5000 ரூபாய் செலுத்தி உறுப்பினராகுங்கள். உயிர்மையின் வெளியீடுகளை உறுப்பினராக இருக்கும் காலகட்டம் முழுக்க 25 சதவிகித கழிவில் நேரடியாக எங்களிடம் பெறலாம். உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 1000 ரூபாய் மதிப்பிலான உயிர்மை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு உயிர்மை இதழ் உறுப்பினராக இருக்கும் … Read more

தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட்

அராத்து மின்னம்பலம் இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரை. திருபாய் அம்பானி இறந்தவுடன் முகேஷும் அனிலும் மோதிக்கொண்டனர். ரிலையன்ஸ் பேரரசின் அடுத்த சக்ரவர்த்தி யார் என்பதற்கான முட்டல் மோதல் தொடங்கியது. திருபாயின், ரிலையன்ஸின் முதலீடுகளை ‘காம்ப்ளக்ஸ் ஹப்’ என்று அப்போது வர்ணித்தனர். அதாவது முதலீடு எப்படி, எங்கே, எந்தெந்த நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதைத்தான் இப்படி வர்ணித்தனர். ஏன் காம்ப்ளக்ஸ் ஹப்? வேறு எதற்கு… அரசை குழப்பி ஏமாற்றி வரி ஏய்ப்பு … Read more

விசு

சாரு வணக்கம்!       பெண்கள் பற்றியும் காமம் பற்றியும் உங்களைப் போல் வேறு எவரும் விவரிக்க முடியாது என்பது என்னுடைய எண்ணம் .    இயக்குநர் விசு இயக்கிய “சகலாகலா சம்பந்தி” என்னும் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.  இருதினங்களுக்கு முன்னால் நீங்கள் எழுதிய “பிரான்ஸூம் நானும் 7 ” வலைப்பக்கத்தை வாசித்தேன்.  அதிலிருந்த காமம் பற்றிய சில தகவல்களை உங்கள் எழுத்துக்களோடு சேர்த்து நான் பேசிக் கொண்டிருந்தேன்.  எனக்கொரு விசித்திரமான அனுபவத்தை உங்கள் எழுத்துக்கள் … Read more

தேசியவாதம்: ஒரு விசாரணை : நிர்மல் (அ) ம்ரின்ஸோ

உண்மையில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.  நம்முடைய வாசகர் வட்டத்திலிருந்து இத்தனை பேர் எழுதுகிறார்களா என்று.  மதியம் நிர்மல் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார்.  நான் அப்போது சினிமாவில் இருந்தேன்.  இப்போது அழைக்கச் சொன்னேன்.  ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன், படித்துப் பாருங்கள் என்றார்.  தயவுசெய்து உங்கள் ப்ளாகில் எடுத்துப் போட்டு விடாதீர்கள் என்றார்.  ஏன் என்றேன் ஆச்சரியத்துடன்.  கூச்சமாக இருக்கிறது என்று பதில் வந்தது.  ஆனால் இந்தக் கட்டுரை தினமலரிலோ தமிழ் இந்துவிலோ இரண்டு மூன்று தினங்கள் தொடராக வந்திருக்க … Read more

புத்தகக் கடல்

சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள புத்தக விநியோகஸ்தர் அலுவலகம் பற்றி பல நண்பர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் பெயர் India Book Distributors. IBD என்று சுருக்கமாக அழைப்போம். இன்றும் நானும் ராம்ஜியும் போய் பல புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தோம். என்னென்ன என்று நாளை எழுதுகிறேன். அவர்களின் வேலை நேரம்:  காலை பத்திலிருந்து மாலை ஐந்து வரை.  சனிக்கிழமை அரை நாள்.  முகவரி: +(91)-44-42012213, 42012214, 42012215, 42012216, 42012212 No 571 Kamaraja Bhavan … Read more

ஒரு கிடாயின் கருணை மனு

அராத்து சிபாரிசு செய்ததால் ஒரு கிடாயின் கருணை மனு பார்த்தேன். படம் துளிக்கூட கவரவில்லை. வசனம் அபாரமாக இருந்தது என்றாலும் பல காட்சிகள் சலிப்பூட்டக் கூடியதாக இருந்தன. திரைக்கதையை இன்னும் இறுக்கிக் கட்டியிருக்கலாமோ? கதையை இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின், காமெடியன், டூயட், ஃபைட் என்ற ஃபார்முலா இல்லாததே ஒரு படத்தை நல்ல படமாக ஆக்கி விடாது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழிவு திவசத்த களி படத்தில் என்ன கதை இருக்கிறது? … Read more