துளிக்கனவு இலக்கிய நிகழ்வில் (தோக்கியோ)

செப்டம்பர் 30 (2023) அன்று தோக்கியோவில் துளிக்கனவு அமைப்பின் சார்பாக நடந்த இலக்கிய விழாவில் எடுத்த சில புகைப்படங்கள் ஹரி, கவிதா, லெனின், கோவிந்தராஜன், ரா. செந்தில்குமார் மற்றும் நண்பர்கள்…

பவா செல்லத்துரை

பவா விஷயத்தில் அராத்துவுடன் முரண்படுகிறேன். ஃபிலிஸ்டைன் கும்பலால் சமூகத்துக்கு ஏற்படும் தீமைகளை விட பவா செல்லத்துரை போன்ற இலக்கிய ஆர்வலர்களால் ஏற்படும் தீமை அதிகம். இது பற்றி நான் மிக அதிகமாகவே எழுதியிருக்கிறேன், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. மேன்மையானவை பற்றியே நான் பேசியிருக்கிறேன் என்கிறார் பவா. அந்த மேன்மையெல்லாம் சமூகத்துக்கு விரோதமானவை என்பது என் கருத்து. பவா என் நெருங்கிய நண்பர். அது வேறு விஷயம். நட்புக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அதோடு, வெறும் பிச்சைக்கார … Read more

ரொப்பங்கி இரவுகள்

ஜப்பானில் பத்து நாட்கள் இனிதே கழிந்தன. எந்த ஊரை விட்டுப் பிரிந்தாலும் அந்த ஊரை நினைத்து நான் ஏங்கினதில்லை. ஆனால் ஜப்பான் அப்படி என்னை ஏங்க வைத்து விட்டது. ஏனென்றால், நான் சென்னையிலேயே ஒரு ஜப்பானியனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அங்கே போன பிறகுதான் தோன்றியது. ரொப்பங்கி இரவுகள் என்று ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இருநூறு பக்கம் வரும். ஒரு நாளில் இருபது பக்கம் என்று கணக்கு. பத்து நாளில் முடித்து விடுவேன். அதை என்.எஃப்.டி.யில் … Read more

Conversations with Aurangzeb

நான்தான் ஔரங்ஸேப் நாவல் ஆங்கிலத்தில் வெளிவர இன்னும் ஐந்தாறு தினங்களே உள்ளன. இந்த நாவல் வெளிவந்த உடனேயே இந்தியாவின் எல்லா நகரங்களிலும் கிடைக்கும். என்னுடைய வாசகர்களில் யார் யார் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கக் கூடியவர்களோ அவர்கள் அனைவரும் இந்த நாவலை வாங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அல்லது, படிக்கக் கூடியவர்களுக்கு வாங்கித் தரலாம். அல்லது, புத்தகத்தை வாங்கி கல்லூரி நூலகங்களுக்கு அளிக்கலாம். புத்தகம் வரப் போகிறது என்ற செய்தி வெளிவந்த உடனேயே குஜராத்தில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு … Read more

தோக்கியோ துளிக்கனவு நிகழ்ச்சியில் என்னுடைய உரை

இதற்கு முன்பு பதிவேற்றம் செய்த காணொலி சரியாக இல்லை என்பதால் மீண்டும் வேறொரு பதிவை இங்கே தருகிறேன். நண்பர்கள் இந்தக் காணொலியைக் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.