லால்குடியில் லா.ச.ரா. பற்றிப் பேச இருக்கிறேன்…

நாளை திருச்சி கிளம்புகிறேன்.  நாளை இரவு திருச்சியில் தங்கல்.  நாளை மறுநாள் ஞாயிறு மாலை நான்கு மணி அளவில் லால்குடி வினோபா கல்வி நிலைய வளாகத்தில் லா.ச.ரா. பற்றிப் பேசுகிறேன்.  லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் நிகழ்ச்சிக்கு வருகிறார் என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  அவர் ஒரு அபாரமான மனிதர்.  திங்கள் மாலைதான் சென்னை எக்ஸ்பிரஸில் சென்னை திரும்புகிறேன்.  இரண்டு தினங்களும் திருச்சியில் என் நண்பன் சுதிர் செந்தில் இல்லாதது எனக்கு வருத்தம்.  வெளியூர் போயிருப்பதாகத் தகவல் அறிந்தேன். … Read more

ஜி. கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் – ஒரு சிறிய மதிப்புரை

முகநூலில் Sarav Urs எழுதியது: படிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு… நாளிதழ் எல்லாம் கேக்கவே வேணாம் ஒரே டெம்ப்ளேட் எழுத்துக்கள். அலெர்ஜி. வார இதழ்’ல மனசுக்கு நெருக்கமான ஒன்னு இரண்டு பக்கங்களுக்காக மொத்தத்தையும் உருட்ட வேண்டிய சூழல். கடுப்ஸ். சிறுகதை எல்லாம் பிரியாணிக்கு வச்ச துவையல் மாதிரி ஒட்டவே மாட்டீங்குது. கவிதை எல்லாம் பார்த்தாலே கொலை வெறி வருது. யோசிச்சு பார்த்தால் காமிக்ஸ், வரலாறு, க்ரைம், அரசியல் கட்டுரைகள் மட்டுமே பிடிச்சிருக்கு. இதுல ஃபேஸ்புக் ரொம்ப சௌகர்யம். பிடிக்கலைன்னா … Read more

கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?

எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  இருந்தாலும் இந்த சனியன் பிடித்த விஷயத்தை எழுதாவிட்டால் என் மண்டை வெடித்து விடும்.  எனக்கு எதிரிகளால் பிரச்சினையே இல்லை.  ஏனென்றால், நான் யாரையும் எதிரி என்றே நினைப்பது இல்லை.  ஆனால் என்னைத் தங்கள் எதிரி என்று நினைத்து பல அன்பர்கள் ரத்தம் கக்கிக் கொண்டிருப்பதை அறிவேன்.  அவர்கள் என்னைப் பற்றி எழுதும் வசைகள் என்னைப் புண்படுத்துவதே இல்லை.  ஏனென்றால், அன்பைப் போலவே வெறுப்பும் ஒரு மனித … Read more

தமிழும் ஆங்கிலமும் : அறிவுஜீவிகளை முன்வைத்து…

பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல்.  (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது.  லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன்.  மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.)  மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை.  … Read more

இதை விட வேறு என்ன வேண்டும்?

http://charuonline.com/blog/?p=4356 மேலே கண்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்காமல் இதைப் படித்தால் புரியாது.  எனவே அதைப் படித்து விட்டு இதைத் தொடரவும். சரவணன் சந்திரனின் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் பற்றி எழுதப்பட்ட மதிப்புரையை பலரும் நான் எழுதியதாகவே நினைத்து விட்டனர்.  அதில் ”ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் ’ரோலக்ஸ் வாட்ச்’சை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார். அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் … Read more

சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ : ஒரு மதிப்புரை

  அய்யா சரவணன் சந்திரன் அவர்களே…ரோலக்ஸ் வாட்ச் கொலைக்குத்து அய்யா…நாவல் படிக்கும்போது எப்படித் தெரியுமா இருந்தது….? இப்படித்தான்… https://www.youtube.com/watch?v=nYSDC3cHoZs Metallica Band-ன் தீவிர ரசிகன் நான் என்கிற வகையில் அவர்களின் இசை வடிவத்தில் இருக்கும் ஒரு உக்கிரமான வெறித்தனத்தை உங்கள் “ரோலக்ஸ் வாட்ச்”-சில் பக்கத்துக்குப் பக்கம் இம்மி பிசகாமல் உணர முடிகிறது. இப்படியா நாவல் முழுக்க விறுவிறுப்பாக எழுதி வைப்பது. நடுநடுவில் மருந்துக்காவது கொஞ்சம் தொய்வு ஏற்படுத்தியிருக்க வேண்டாமா…? என்ன போங்க… Visual Language பயங்கரமாக இருக்கிறது. … Read more