புதிய எக்ஸைல் : அருண் ’தமிழ் ஸ்டுடியோ’ கருத்து

அன்பின் சாரு, எனக்கு அனுப்பிய நாவலின் இந்தப் பகுதி மிகச் சிறப்பாகவே இருக்கிறது. சுவாரசியம் இல்லை என்று சிலர் சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள். அப்படியெல்லாம் இல்லை, சினிமாவைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு, சினிமாவை நேசிப்பவர்களுக்கு, இந்தப் பகுதி மிக சுவாரசியமாக இருக்கும். தவிர, சினிமாவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றால் கூட, அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும், இந்தி சினிமாக்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தெரிந்து கொள்ளவும் அவசியம் இதனைப் படித்தே ஆக வேண்டும். மிக நுட்பமான பல தகவல்கள் ஆங்காங்கே … Read more

புதிய எக்ஸைலின் ஒரு அத்தியாயம் பற்றி நாகூர் ரூமி

புதிய எக்ஸைலின் ஒரு அத்தியாயத்தை நாகூர் ரூமிக்கு அனுப்பி வைத்திருந்தேன்.  அதற்கு அவர் எழுதிய கடிதம்: அன்புள்ள அண்ணன், படித்துவிட்டேன். என்னளவில் இதில் மாற்றங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை. 1970களுக்குக்  கொண்டுபோய் விட்டுவிடுகிறது உங்களது எழுத்து உண்மையிலேயே. இது அந்த அத்தியாயத்தின் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சில இடங்களில் என் கருத்தை அடைப்புக்குறிக்குள் கொடுத்துள்ளேன். அவை சேர்ப்பதற்கு அல்ல. நீங்கள் பார்ப்பதற்கு. கட்டி ’படங்க்’ என்பது ’பதங்க்’ என்று இருக்கவேண்டும் (லதா பாடும் பாட்டைக் கேட்டால் உங்களுக்கே … Read more

புதிய எக்ஸைல் : முதல் பிரதி

1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது பாரதி மணியோடு அவ்வளவு பழக்கம் இல்லை.  அங்கே வெங்கட் சாமிநாதனோடு சேர்ந்து விட்டால் மற்றவர்களோடு நட்பு கொள்வது சாத்தியம் இல்லை.  சாம் ஒன்றும் சொல்ல மாட்டார்.  ஆனால் நமக்கே அப்படித் தோன்றி விடும்.  அது மாதிரி ஒரு ‘பயங்கரவாத’ குழு அது.  டாக்டர் ரவீந்திரன் மட்டும் எல்லோருடனும் நட்பாகப் பழகுவார்.  இந்தப் பிரச்சினையினாலேயே க.நா.சு., ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களோடு அங்கே பழக முடியாமல் போய் விட்டது.  இலக்கியச் … Read more