இன்று மூன்றரை மணிக்கு…

இன்று அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் மூன்றரை மணிக்கு உரையாற்றுகிறேன். ஐந்து மணிக்கு எஸ்.ரா. பேசுவதால் சரியாக மூன்றே முக்காலுக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல முறையில் உரையாற்றும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயரை யாரும் சேர்ப்பதில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்துத்தான் என்னை எழுத்தாளர் பட்டியலிலேயே சேர்த்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் சுமார் எட்டு முறை நான்கு மணி நேரம் தொடர்ந்து உரையாற்றியிருக்கிறேன். காலை ஆறு மணிக்குத் தொடங்குவேன். இடையில் தண்ணீர் கூட அருந்தாமல் … Read more

உலகப் புத்தக தின விழா

வரும் ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாலை 3.45 மணிக்கு மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். காலை பத்து மணியிலிருந்தே விழா தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். தவறாமல் வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னை உரையாற்ற அழைத்தபோது நான் கொஞ்சம் தயங்கினேன். ஏனென்றால், எழுத்தாளர்கள் பேச்சாளர்களாக மாற வேண்டும் என்று ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு இல்லை. சார்ல்ஸ் … Read more

எந்த விருதும் கிடைக்காததன் காரணம் இதுதான்!

ஏதாவது நல்லது நடக்க இருந்தால் கடைசி நிமிடத்தில் அது தட்டிப் போய் விடுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு Jan Michalski விருதுக்கு ஸீரோ டிகிரி பரிந்துரைக்கப்பட்டது.  குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல் விருது பெறவில்லை.  விருது பெற்ற நாவல் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை.  அந்தப் பட்டியலில் ஸீரோ டிகிரிதான் வலுவானது என்றும் அதற்குத்தான் விருது கிடைக்கும் என்றும் எஸ்.ரா. எனக்கு ஃபோன் செய்து சொன்னார்.  ஆனால் கிடைக்கவில்லை.  இப்படியே ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டு போகிறது.  இப்போது … Read more

the most funniest and craziest thing of all the seven worlds…

ஆர்மரி ஸ்கொயரில் என் ராஸ லீலாவைத் திட்டி ஒரு முழத்துக்கு எழுதியிருக்கிறார்கள் இல்லையா, இந்த ஆர்மரி ஸ்கொயர்காரர்கள் தேர்ந்தெடுக்கும் நூலை ஓப்பன் லெட்டெர் புக்ஸ் என்ற பதிப்பகத்தில்தான் வெளியிடப் போகிறார்கள். இந்த ஓப்பன் லெட்டர் புக்ஸின் தலைவர் பெயர் Chad W. Post. இவர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரி நாவலை பாடமாகச் சேர்த்தவர். ஸீரோ டிகிரியில் எவ்வளவு செக்ஸ் இருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். இதே Chad W Post ஸீரோ … Read more

ஆதரவுக் குரல்: றியாஸ் குரானா

காலையில் அபிலாஷ் சந்திரனின் காணொலி பார்த்தேன். எனக்கு ஆதரவாக எப்போதும் பேசக் கூடிய ஒருவர் அபிலாஷ். நண்பர் என்பதால் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. ஒத்த கருத்து என்பதால்தான் நட்பே கை கூடுகிறது. இப்போது றியாஸ் குரானா. நான் இலங்கை செல்வதால் றியாஸ் குரானாவைப் பாராட்டி எழுதுகிறேன் என்ற பிராது கிளம்பும். நான் அரசியல்வாதி அல்ல. நான் றியாஸைச் சந்திக்கிறேன் என்ற காரணத்தினால்தான் அவரை அவசரமாகப் படித்தேன். பார்த்தால் இவரை நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்க வேண்டும் … Read more