தியாகராஜா நாவலை ஒரு பீத்தோவனின் ஃபிஃப்த் ஸிம்ஃபனி அளவுக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முதல் அத்தியாயத்தை என் நண்பர் ஈஷ்வருக்கு அனுப்பினேன். அவர் எழுதியிருந்த கடிதத்தை நாவலை முடித்த பிறகு வெளியிடுவேன்.

இந்த நாவல் பல நூற்றாண்டுகளுக்குப் பேசப்படும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு அதில் விஷயம் இருக்கிறது. இதுவரையிலான என் எழுத்துப் பாணிக்கு முற்றிலும் புதிய எழுத்து முறையைக் கையாண்டிருக்கிறேன்.
இந்த நாவலை ஏதாவது ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ ஸ்பான்ஸர் செய்தால் அந்தத் தொகை என் நாவல்களின் மொழிபெயர்ப்புக்கு உதவும். ஸ்பான்ஸர் தொகை ஐந்து லட்சம் ரூபாய். ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனம் அல்லது நண்பரின் பெயர்
Sponsored By ———————– என்று அட்டையிலேயே வெளியிடப்படும். அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களால் முடியாவிட்டால், உங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களிடம் இது குறித்துப் பேசுங்கள். இது அந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய விளம்பரமாக இருக்கும். காலம் உள்ளளவும் உங்கள் பெயர் நிற்கும். செய்தி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் தொகைக்கு இந்த ஐந்து லட்சம் ரூபாய் என்பது மிகவும் சாதாரணம். தியாகராஜா நூல் ஒரு புத்தகமாக அல்ல; ஒரு பொக்கிஷத்தைப் போல் தயாரிக்கப்பட இருக்கிறது.
ஔரங்ஸேப் நாவலை இப்படித்தான் ஒரு நண்பர் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து ஸ்பான்ஸர் செய்தார். அவர் பெயர் இன்னமும் நாவலில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் அவர் தனிநபர். நிறுவனம் அல்ல.

பிரச்சினை என்னவென்றால், இந்த விஷயம் நிறுவனங்களைப் போய்ச் சேருவதில்லை. முடிந்தால் இந்தச் செய்தியை உங்களுக்குத் தெரிந்த நிறுவனங்களிடம் கொண்டு சேருங்கள்.
இது தவிர, ஸ்பெஷல் எடிஷன் தனியாக வர இருக்கிறது. அதற்கான குறைந்த பட்ச நன்கொடை 10000 ரூ. ராஸ லீலா ஸ்பெஷல் எடிஷன் இப்படித்தான் வந்தது. சுமார் 100 பேர் நன்கொடை செலுத்தி வாங்கினார்கள். ஆனால் தியாகராஜா நாவலின் அடக்க விலையே ஆயிரம் ரூபாயைத் தாண்டும் போலிருக்கிறது. ஏனென்றால், நான் அம்மாதிரியான புத்தகத் தயாரிப்புக் கட்டமைப்பைக் கோரியிருக்கிறேன். தியாகராஜா நாவலின் ஸ்பெஷல் எடிஷனை வாங்குபவர்களின் பெயர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் அவர் பற்றிய எனது குறிப்புகளோடு அச்சிடப்பட்டு இருக்கும். அதாவது, நீங்கள் வாங்கும் நூலில் உங்கள் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். அதன் கீழே என் கையெழுத்து இருக்கும். கையெழுத்தை ஒவ்வொரு பிரதியிலும் போடுவேன். கையெழுத்து அச்சிடப்பட்டிருக்காது. இதற்கு நீங்கள் ஆதரவு நல்க வேண்டும் என விரும்புகிறேன். எனக்குக் கிடைக்கும் பணம் அத்தனையும் மொழிபெயர்ப்புக்காக மட்டுமே செலவிடப்படுகிறது என்பதையும் ஞாபகப்படுத்துகிறேன். இன்னும் ஓரிரு மாதங்களில் Westland Books பதிப்பகத்திலிருந்து பெட்டியோ நாவல் ஆங்கிலத்தில் வெளிவரும்.
பணம் அனுப்புவதற்கான விவரம் கீழே கொடுத்திருக்கிறேன்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai