ஔஸீரா X

ஔரங்ஸேப், ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் ஆகிய நான்கு நாவல்களிலிருந்தும் சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதை ஔஸீரா X என்ற தலைப்பில் ஒரு தொகுப்பாகக் கொண்டு வருகிறார்கள் ராஸ லீலா பதிப்பகத்தினர். சாரு களஞ்சியம் என்ற தொகுப்புக்கு இது ஒரு முன்னோட்ட வெளியீடாக இருக்கும். அதன் அட்டைப் படம் கீழே. அட்டை வடிவமைப்பு நிர்குண்

சாரு களஞ்சியம்

ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து Charu Reader என்ற தொகுதி வெளிவர இருக்கிறது. சாரு களஞ்சியம் என்று பெயர் வைத்திருக்கிறேன். இரண்டு தொகுதிகள். ஒவ்வொரு தொகுதியும் ஆயிரம் பக்கம். கெட்டி அட்டை. இன்னும் இரண்டு மாதங்களில் வரும். ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் என்னுடைய அறுபத்தொன்பது நூல்கள் வந்துள்ளன. ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து பதினோரு நூல்கள். இந்த எண்பது நூல்களிலிருந்தும் உங்களுக்குப் ப்பிடித்த பகுதிகளின் பக்க எண்களை எனக்கு அனுப்புங்கள். தொகுப்பு வேலைக்கு எனக்கு அது உதவியாக இருக்கும். … Read more

வெறியாட்டம்

தெய்யம் என்று ஒரு நடனம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. நான் 1978இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது தெய்யம் நடனத்தைப் பார்த்திருக்கிறேன். தெய்யம் கலையின் உச்சபட்ச கலைஞர்களின் நடனத்தை அங்கே அனுபவம் கொண்டிருக்கிறேன். உத்தம வில்லன் படத்தில் தெய்யம் கொஞ்சமாக வருகிறது. தெய்யம் போன்ற ஒரு கடினமான நடனக் கலை உலகிலேயே இல்லை என்பது என் கருத்து. பாலேயும் கடினமானதுதான். ஆனால் தெய்யம் நெருப்பு. நெருப்போடு ஆட வேண்டும். வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். இத்தனை ஆக்ரோஷமான … Read more

கோவை புத்தக விழாவில் அடியேன்

சனிக்கிழமை (18.7.2026) அன்று பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை என்ற கிராமத்துக்குச் செல்கிறேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (19 ஜூலை) மதியம் ஊராட்சிக்கோட்டையிலிருந்து கிளம்பி கோவை செல்கிறேன். கோவை புத்தக விழாவில் மாலை நான்கு மணியிலிருந்து எட்டு வரை வான்கோ பதிப்பகத்தில் இருந்து வாசகர்களுக்கு என் புத்தகங்களில் கையெழுத்துப் போடுவேன். திங்கள் கிழமை (20ஆம் தேதி) மதியம் புத்தக விழாவுக்கு வந்து இரண்டு மணி நேரம் இருந்து விட்டு ஊராட்சிக்கோட்டை திரும்புவேன்.