ஆப்பம் தேங்காப்பால்

என் அளவுக்கு உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு மனிதனை நான் இதுவரை சந்தித்தது இல்லை.  ஓரளவுக்கு ஷங்கர் என்ற நண்பரைச் சொல்லலாம்.  அவர் இப்போது தன் நண்பருடன் இணைந்து கோவை அலங்கார் விலாஸ் என்று ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.  எனக்குத் தெரிந்து அண்ணா நகரிலும் நந்தனத்திலும் இரண்டு பிரிவுகள் உள்ளன.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் எங்கெல்லாம் நல்ல உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று சாப்பிடுவது வழக்கம்.  இப்போது அவர் வீடு மாற்றிக் கொண்டு போனதிலிருந்து … Read more

கோவா – சாலைவழிப் பயணம் (2)

இந்த சாலைவழிப் பயணத்துக்கு சுமார் இருபது பேர் வருவதாகக் கடிதம் எழுதியிருந்தார்கள்.  ஒவ்வொருவருக்கும் பதில் எழுதியிருக்க வேண்டும்.  நாவல் வேலை தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருப்பதால் பதில் எழுத முடியாமல் போனது.  காரில் ஆறு பேருக்குப் பெயர் கொடுத்து விட்டார்கள்.  கணபதி, சீனி, வினித், பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு நண்பர் (இவருக்கும் என்னைப் போலவே வீட்டில் நெருக்கடி), ராஜா வெங்கடேஷ், அடியேன்.   இந்த சாலைவழிப் பயணத்தில் சேர்ந்து கொள்ள விரும்பி கடிதம் எழுதிய நண்பர்கள் இருபது … Read more

கோவாவுக்கு சாலைவழிப் பயணம்

வரும் இருபத்தெட்டாம் தேதி இங்கிருந்து ஹைதராபாத் வரை விமானத்தில் சென்று விட்டு, பிறகு இருபத்தொன்பதாம் தேதி ஹைதராபாதிலிருந்து கோவாவுக்கு நண்பர் கணபதியின் காரில் செல்வதாக ஏற்பாடு.  வழியில் ஹம்ப்பியில் இரண்டு நாள் தங்கலாமா என்று கேட்டார் சீனி.  என் வீட்டில் சீனியோடு நான் பேசுவதற்குத் தடை என்பதால் போன் சாட் மூலம்தான் உரையாடல்.  ஓ தங்கலாமே, இரண்டு நாட்களுக்கும் ஹம்ப்பியில் வேலை இருக்கிறது என்றேன்.  மற்றவர்களாக இருந்தால் ஓகே என்று விட்டு விடுவார்கள்.  சீனி எழுத்தாளராக மாறிய … Read more

அச்சு ஊடகங்களின் காலம்

வணக்கம் சாரு ஐயா, என்னுடைய கேள்விக்கு உங்களுடைய தளத்தில் பதில் கூறியமைக்கு மிக்க நன்றி. உயிர்மை சிற்றிதழ் நான் வாசித்ததில்லை.காலச்சுவடு, நான்  கல்லாரியில் இளநிலை படித்த பொழுது தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். அந்த சமயத்தில் காலச்சுவடு எனக்கு ஒரு அறிவுப்பெட்டகமாகவே விளங்கியது.அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன். இப்பொழுது தொலைதூர வழியில் முதுநிலை பயில்வதால்  தொடர்ச்சியாக அதை வாசிக்க  இயலவில்லை. .ஆங்கிலத்தில், நிறைய பொதுவான விஷயங்களைப் பேசும் இணையதளங்கள் உள்ளன. தமிழில் அது போன்றவை குறைவாகவே உள்ளன. … Read more

சிற்றிதழ்கள் குறித்து ஒரு கேள்வி

வணக்கம் சாரு ஐயா,இன்று அருஞ்சொல்லில் வெளியான உங்கள் பேட்டியை வாசித்தேன். பேட்டியில் நீங்கள் குறிப்பிட்ட சிற்றிதழ்களின் பெயர்களை எல்லாம் பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாபகம்.அதுவும் நான் தமிழை மொழிப் பாடமாக எடுத்ததால் அதன் பெயராவது தெரிந்தது. இல்லையெனில் அக்காலத்தில் வெளிவந்த சிற்றிதழ்களின் பெயர்கூடத் தெரிந்திருக்காது.இலக்கிய இதழ்கள் நடத்த எழுத்தாளர்கள் சந்தித்த இன்னல்களையும் அவ்விதழ்கள் அக்கால எழுத்துலகில்  ஏற்படுத்திய தாக்கத்தையும் அப்பேட்டியில் விரிவாகக் கூறியிருந்தீர்கள். குறிப்பாக  ” இலக்கிய வெளிவட்டம்” என்ற சிற்றிதழ் நடத்திய ஜெனகப்ரியா அவர்களைப் … Read more

கக்கூஸ் பக்கத்தில் சிறுதெய்வங்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

கக்கூஸ் பக்கத்தில் சிறுதெய்வங்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-interview-on-tamil-literary-movements