அருஞ்சொல்லுக்கு வாழ்த்துகள்

போனதே தெரியாமல் மூன்றாண்டுகள் ஆகி விட்டன, அருஞ்சொல் தொடங்கி. அதன் ஆசிரியர் சமஸுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். https://www.arunchol.com/editor-article-on-next-phase-arunchol

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 5 (வெளிநாட்டு நண்பர்களுக்கு…)

ஜூன் முப்பதாம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியற் கல்லூரியில் நான் நடத்த இருக்கும் உலக சினிமா குறித்த பயிலரங்கு பற்றிய அராத்துவின் ஃபேஸ்புக் குறிப்பில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.   ”இந்தப் பட்டறை மூலம் நம் ஆட்கள் உலக சினிமா எடுப்பார்கள் என தான் நம்புவதாக சாரு நிவேதிதா சொல்லியிருக்கிறார்.” இப்போது நான் இந்தக் கருத்தை இன்னும் வலியுறுத்திச் சொல்லுகிறேன்.  என்னுடைய பயிலரங்கில் கலந்து கொண்டு நான் சொல்வதை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் உங்களால் உலகமே … Read more

அநாவசியமாக ஊர் வாயில் விழ விருப்பமில்லை…

எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்று சாதனாவைச் சொன்னபோது, வளன் அரசுவைச் சொன்னபோது எந்தப் பிரச்சினையும் இல்லை. காயத்ரியைச் சொன்னபோது ஒரே அக்கப்போராகி விட்டது. அந்த அக்கப்போரில் எனக்கே கொஞ்சம் பயமாகிப் போனது, சிறுகதையில் தேறி விட்டாள், நாவலில் போகப் போக சொதப்பி விடுவாளோ என்று. இதுவரை பத்துப் பன்னிரண்டு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். போகப் போக என் பயம் நீங்கி விட்டது. பெயரைக் காப்பாற்றி விட்டாள். இப்போது இந்த இரண்டாம் அத்தியாயம். இதைப் படித்த போது எனக்கு … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் – 4

ஜூன் 30 அன்று நடக்க இருக்கும் உலக சினிமா பயிலரங்குக்காக நாம் உரையாட இருக்கும் படங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். என்ன படங்கள் என்று இப்போதே சொன்னால் ஆர்வம் குன்றி விடும். ஆறு மணி நேரம் பேசுவேன். அந்தப் பேச்சை குறிப்புகள் எடுத்துக்கொண்டு பார்க்க ஆரம்பித்தால் ஒரு ஆண்டுக் காலத்துக்கு நீங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அநேகமாக இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இயக்குனர்களாக இருப்பார்கள். (சே, இந்த வாக்கியத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன். வந்து விழுந்து விட்டது. … Read more

உலக சினிமாவின் இலக்கணமும் அழகியலும் (3)

ஒருவர் பொறியியல் இளங்கலை முடித்து அரசு வேலைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார். புத்தகச் செலவுக்காக அவ்வப்போது தினக்கூலியாக பூக்கட்டுகிறார். ஆடவர். இன்னொருவர் சிவில் சர்விஸ் தேர்வுக்காகப் படிக்கிறார். என்னுடைய ஒவ்வொரு கூட்டத்துக்கும் வந்து விடுவார். திருவனந்தபுரத்துக்குக் கூட வந்து என்னோடு இருந்து எனக்கு உதவிகள் செய்தார். இந்த இருவரும் திருவண்ணாமலை பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியுமெனில் மகிழ்ச்சி அடைவேன். charu.nivedita.india@gmail.com