காந்தி ஹிட்லருக்கு எழுதிய இரண்டு கடிதங்கள்

காந்தி பற்றி என்னிடம் மாதம் ஒருமுறையாவது ஒரு வாசகர் கேள்வி கேட்டு விடுகிறார். கேள்விகள் பொதுவாக காந்தியை நிராகரிப்பதாகவே இருக்கும். அல்லது, முகநூலில் யாராவது காந்தியைக் கடுமையாக விமர்சித்து எழுதியதற்கு விளக்கம் கேட்டு இருக்கும். இவர்களுக்கு எல்லாம் நான் சொல்லக் கூடிய ஒரே பதில், Homer A Jack தொகுத்த The Gandhi Reader என்ற புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் என்பதுதான். நீங்களே படித்து முடிவு செய்து கொள்ளுங்கள். இங்கே காந்தியை விமர்சிப்பவர்கள் அனைவருமே காந்தி பற்றிய … Read more

பூச்சி 173: என் கவிதை

நான் வரையறைகளுக்குள் அடங்க மறுப்பவன்.  அடையாளங்களிலும் அடைபட மாட்டேன்.  எனவே என் கவிதைகள் பொது அர்த்தத்தளத்தில் கவிதைகளாகவே ஆக மாட்டா.  கவிதைப் புலத்தில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை.  நிகானோர் பார்ராவை எதிர்க் கவிதை என்கிறார்கள்.  ஆனால் அவருடைய எதிர்க் கவிதையே ஒரு அடையாளத்துக்குள் வந்து விட்டது.  எந்த அடையாளத்திலும் வரையறையிலும் வராத கவிதைகள் என்றால் ஒரே ஒரு ஆள்தான் இருக்கிறார்.  அவர் கவிஞர்களுள் சாதி விலக்கம் செய்யப்பட்டவர்.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி.  எக்கச்சக்கமான கவிதைகளை எழுதிக் குவித்தார்.  அவர் … Read more

Pithy thoughts – 17

பூஜ்யம் ஒன்று பூஜ்யமும் ஒன்றும் பூஜ்யம் பூஜ்யமும் ரெண்டும் பூஜ்யம் பூஜ்யமும் மூணும் பூஜ்யம் பூஜ்யமும் பூஜ்யமும் பூஜ்யம் ஒன்றும் பூஜ்யமும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்றும் ரெண்டும் ஒன்று ஒன்றும் மூணும் ஒன்று ஒன்றும் ஒன்றும் ஒன்று ஒன்று பூஜ்யம் ஒன்று பூஜ்யம் ஒன்றுக்குள் பூஜ்யம் பூஜ்யத்துக்குள் ஒன்று பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம் ஒன்று ஒன்று ஒன்று

Pithy thoughts – 16

பிரம்மனின் கனவில் மழை பெய்து கொண்டிருக்கிறது மழையில் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது அழிந்து போன உலகத்தில்   திரும்பவும் தலையெடுக்கிறது காலம் பிரம்மனின் கனவில் மேகங்கள் திரள்கின்றன…

Pithy thoughts – 15

நேற்று வந்த வெர்னரின் கடிதத்தைப் படித்ததிலிருந்து பாவ்லோ கொய்லோவின் சாகசத் தனிமை ஞாபகத்தில் வந்து மோதுகிறது தென் ஃப்ரான்ஸில் மனித வாடையற்ற ஒரு நிலப்பகுதியில் ஆறு மாதம் பிறகு ப்ரஸீலில் குடும்பத்தோடு ஆறு மாதம்  வால்டன் வனத்தில் தோரோ வாழ்ந்தது இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் இரண்டு நாட்கள் வனம் அலுத்ததும் நகரத்துக்குச் சென்று விட்டார் தோரோ என் ஜெர்மானிய நண்பன் வெர்னர் முப்பத்து மூன்று வயது  ஆய்வு மாணவன் குடும்பமில்லை உற்றமில்லை சுற்றமில்லை தேசமுமில்லை பணம் … Read more

Pithy thoughts – 14

ஆயுதங்கள் மாறின தேசங்கள் மாறின குதிரை விமானமாயிற்று ஆனாலும் காதலில் தோல்வியுற்ற மனிதன் இன்னமும் மதுவைத்தான் நாடி ஓடிக் கொண்டிருக்கிறான் கணவனின் துரோகம் தாங்க முடியாத பெண் இன்னமும் அரளி விதையைத்தான் அரைத்துக் கொண்டிருக்கிறாள் இன்னமும் ஒரு குழந்தை தாயைத் தேடி அழுது கொண்டிருக்கிறது