Huntsman

லக்ஷ்மி சரவணகுமார் தமிழின் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். கருத்து முரண்பாடுகள் அவருக்கும் எனக்கும் நிறைய உண்டு. அநேகமாக எல்லா விஷயங்களிலுமே என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய பல சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உப்பு நாய்கள் நாவலும் எனக்குப் பிரீதியானது. ஒரே ஒரு ஆபத்துதான். வண்ணதாசன் அவரைப் புகழ்ந்து புகழ்ந்து பேசுவார். அப்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்தப் பக்கம் போய் விடாதே என்று லக்ஷ்மியிடம் எச்சரிப்பேன். அவருடைய புத்தக விமர்சன உரையிலும் இதைக் … Read more

பந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)

ஒரு விளக்கம்: சுஜாதாவைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களுக்கு நான் சொன்னது புரியவில்லை.  சுஜாதாவிடமிருந்து நானும் கற்றவன் தான்.  மிக சுவாரசியமாக எழுதியவர் அவர்.  ஒருமுறை ஒரு கதையில் கணேஷ் நியாட்சே புத்தகம் படித்துக் கொண்டிருப்பான்.  அந்தக் காலத்தில் ஏது இண்டர்நெட்?  கல்லூரியில் உள்ள என்ஸைக்ளோபீடியாவில் N எழுத்தில் வரும் நியாட்சே முழுவதையும் தேடினேன்.  ஜெர்மானியத் தத்துவவாதியான நீட்ஷே தான் சுஜாதாவில் நியாட்சே ஆகியிருந்தார்.  ஆனாலும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சுஜாதாதானே?  ஏனென்றால், … Read more

சாரு – அய்யனார் உரையாடல் – அடுத்த பகுதி

”இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியப் பயணத்தில் திடார் திடாரென அரங்கத்துக்கு வருவதும், உறக்கத்தில் ஆழ்வதும் புதிய விஷயமல்ல. ஆனால் செல்லப்பா தன்னுடைய கடைசி மூன்று ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய என் சிறுகதை பாணி (250 பக்கம்) சுதந்திர தாகம் (1800 பக்கம்) ராமையாவின் கதைப்பாணி (368 பக்கம்) ஆகிய பழைய பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் … Read more

உரையாடல் மேலும் தொடர்கிறது…

நேற்றிலிருந்து சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சத்தையும், அசோகமித்திரனின் இருவர் குறுநாவலையும் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.  கையில் இருந்திருந்தால் நேற்றே அய்யனாருடனான உரையாடலை முடித்திருப்பேன்.  இது போன்ற அடிப்படை நூல்கள் கூட இணையத்தில் கிடைப்பதில்லை என்பது ஆயாசம் அளிக்கிறது.  கிடைத்திருந்தால் ரெண்டு நிமிட வேலை.  என்னுடைய ஜீவனாம்சம் காப்பி 1985-இல் வாங்கியது.  எழுத்து பிரசுரம், 19-A, பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5இலிருந்து செல்லப்பாவே பிரசுரித்தது.  அதுதான் செல்லப்பா குடியிருந்த வீடாக இருக்க வேண்டும்.  சில தினங்களுக்கு … Read more

ஜீவனாம்சம்

உரையாடல் தொடர்கிறது…

அன்புக்குரிய அய்யனார், நேற்று (14.9.2019) உங்கள் கேள்வியைப் படித்து விட்டு சந்நதம் வந்தது போல் மேற்கண்ட பதிலைத் தட்டினேன்.  படு வேகத்தில் தட்டச்சு செய்ததில் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலான நரம்புகளும் விரல்களும் நடுங்க ஆரம்பித்து விட்டன.  அத்தனை வேகம்.  மனதில்.  திடீரென்று யூரிபிடஸின் (Euripides) மெடியா நாடகத்தில் வரும் மெடியாவின் சோகம் என்னை ஆக்ரமித்துக் கொண்டது.  மெடியாதான் சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கி வந்த இலக்கியவாதிகள்.  கணவனால் புறக்கணிக்கப்பட்டு தன் குழந்தைகளைக் கொன்ற அவளது கண்ணீர்தான் இலக்கியவாதிகளின் கதை.  … Read more