திரும்பி விட்டேன்…

இரண்டு வார ஜப்பானியப் பயணம் இனிதே முடிந்து நேற்று (24.10.2024) நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தேன். பொதுவாக என் தோற்றத்தின் காரணமாகவோ என்னவோ கஸ்டம்ஸில் என்னை வாட்டி எடுப்பார்கள். நேற்று அப்படி எதுவும் சம்பவம் நடக்கவில்லை. ஜப்பான் ஒரு சில விஷயங்களில் மலிவாகவும் ஒரு சில விஷயங்களில் நம்ப முடியாத அளவுக்கு செலவு வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது. இப்போது ஆகியிருக்கும் செலவில் நான் இரண்டு வாரம் சீலே, கொலம்பியா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருக்க முடியும். சீலேயில் … Read more

அன்னையர் தினம்

(மீள் கட்டுரை) மே 13, 2018 இன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது. முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர். இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை. என் மீது நம்பிக்கையும் தேவை. என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன். இதுதான் மிகவும் முக்கியம். நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் … Read more

தோக்கியோவில் ஒரு சந்திப்பு

அக்டோபர் 20 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு துளிக்கனவு இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் சாருவையும் அராத்துவையும் சந்திக்கலாம். இடம்: செய்சின்ச்சோ கம்யூனிட்டி ஹால், தோக்கியோ

அம்மாவின் பொய்கள்

அது ஒரு செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்றால் என் வீட்டு மாடியில் ஆன்மிக வகுப்பு நடக்கும். சுமார் முப்பது பேர். இந்த ஆன்மிக வகுப்புக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு விஷயம், நான் வளர்க்கும் ஸோரோ. க்ரேட் டேன் வகை நாய் என்பதால் மூன்று அடி உயரம், ஐந்தடி நீளம். முன்னங்காலைத் தூக்கி நின்றால் ஒன்பது அடி. இப்படி ஒரு பிராணி நடமாடும் வீட்டுக்கு வர யாருக்குத் துணிவு வரும்? ஆனாலும் ஆன்மிக வகுப்புக்கு வரும் யாரும் இதுவரை ஸோரோவைக் … Read more

வர்ண மேகங்களிடையே இருந்து… (நெடுங்கதை) மனுஷா ப்ரபானி திஸாநாயக்க சிங்களத்திலிருந்து தமிழில்: எம். ரிஷான் ஷெரீப்

(ஒரு முன்குறிப்பு: மனுஷா ப்ரபானி திஸாநாயக்கவின் இந்த நெடுங்கதையைத் தமிழில் ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் வாசித்த போது எனக்கு இரண்டு எண்ணங்கள் தோன்றின. தமிழில் இத்தனை தீவிரமான erotic எழுத்தை இதுவரை நான் எதிர்கொண்டதில்லை. அதுவும் ஜனன உறுப்புகளின் பெயர் பதியாமல். இரண்டாவது, இத்தனை தீவிரமான எழுத்தை அதே வீரியத்துடன் தமிழில் கொண்டு வந்த ரிஷான் ஷெரீபின் லாவகம். இதை வாசிக்கும்போது இன்னொரு லத்தீன் அமெரிக்கச் சிறுகதை ஞாபகம் வந்தது. அந்தக் கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை … Read more