பழுப்பு நிறப் பக்கங்கள் : சி.சு. செல்லப்பா (1)

1997-க்குப் பிறகு இந்த நாவல் மறு பிரசுரம் ஆகாததால் இது எங்கே கிடைக்கும் என்று பல பதிப்பகங்களிலும் புத்தக நிலையங்களிலும் தேடினேன். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் ‘நவீன விருட்சம்’ ஆசிரியர் அழகிய சிங்கர் தான் தன்னுடைய சொந்தப் பிரதியை என்னிடம் கொடுத்தார். ஒரு எழுத்தாளர் சொன்னார், யாரையாவது தண்டிக்க வேண்டுமென்றால் அவரிடம் சுதந்திர தாகம் தொகுதிகளைக் கொடுத்து ஒரு அறையில் அடைத்து விடலாம் என்று. இப்போது என் கைகளில் ‘சுதந்திர தாகம்’. எப்படி இருந்தது என்று அடுத்த … Read more

மரணத்தை அவ்வளவு எளிதாகப் பரிசளித்து விட முடியாது : செல்வகுமார்

ஒரு இளம் கவிஞர் முகநூலில் என்னை தேவடியாள் மகனே என்றும் செத்துப் போ என்றும் சொல்லியிருக்கிறார்.  பல நூறு பேரால் பகிரப்பட்ட அந்தப் பதிவு எனக்கும் வந்தது.  நான் இப்போது சொல்லப் போவதை வாசகர் வட்ட நண்பர்கள் கூட நம்பப் போவதில்லை.  சத்தியமாகச் சொல்கிறேன்.  தேவடியாள் மகனே மற்றும் செத்துப் போ என்ற வார்த்தைகள் எனக்கு ஆசானே, உன்னை ஆராதிக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளாகத்தான் தோன்றின.  இப்போது எனக்கு அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  அவருக்கு நான் … Read more

கார்ல் மார்க்ஸ் நூல்கள் வெளியீட்டு விழா பேச்சு – காணொளி

நேற்றைய புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது.  அது பற்றி இன்று காலை ஒரு சிறுகதை எழுதினேன்.  பிறகு வெளியிடுகிறேன்.  இப்போது நேற்றைய பேச்சின் காணொளி.  ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

விழா பதிவுகள் – 31

டாக்டர் ஸ்ரீராம் ராஜா அண்ணாமலை மன்றம் சென்றிருந்தார்.  அது பற்றி அவர் எழுதியிருந்த பதிவு: இன்று சில procedures-க்காக ராஜா அண்ணாமலை மன்றம் போயிருந்தேன். மேலாளர் என்னிடம், “நீங்கள் அவரின் மகனா?” என்று கேட்டார். “இல்லைங் சார், ரீடர் அண்ட் ஃப்ரெண்ட்,” என்று சொன்னேன். “அன்னிக்கு அவ்வளவு கூட்டம் வந்திருந்துச்சே? அவங்கள்லாம் சாரோட ரிலே(ட்)டிவ்ஸா?” என்று கேட்டார். “அத்தனை பேரும் சாரோட ரீடர்ஸ்,” என்றேன். “இவளோ இளைஞர்கள இந்த ஹால்ல நான் பார்த்ததில்ல. ஆல் தெ பெஸ்ட்,” … Read more

தினமலரில் ஒரு சிறிய நேர்காணல்…

கோவை தினமலர் இன்றைய பதிப்பில் என்னுடைய சிறியதொரு நேர்காணல் வந்துள்ளது.  தினமலர் மின்னிதழிலும் பேட்டியைக் காணலாம். http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/COIMBATORE/2016/03/19/ArticleHtmls/19032016256008.shtml?Mode=1