bynge.in நண்பர்கள் ஒரு புதுமை செய்கிறார்கள். எந்தெந்த எழுத்தாளர்களின் தொடரை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையும் கதையோடு கூட வருகிறது. இப்போது முகநூலில் லைக் எண்ணிக்கை வருகிறது அல்லவா, அந்த மாதிரி. நான் ஏதாவது முகநூலில் எழுதினால் முப்பது லைக். அதுவே ஒரு பெண் தன் புகைப்படத்தைப் போட்டு குட்மார்னிங் ஃப்ரெண்ட்ஸ் என்று போட்டால் 2039 லைக் வருகிறது, உடனே நான் depress ஆகி விட வேண்டும். bynge.in செய்வது ரொம்ப நல்ல காரியம். இது ஒரு ஆன்மீகப் பயிற்சி. ஏனென்றால், நாளை எஸ்.ரா.வும் ஜெயமோகனும் எழுத வந்தால் எஸ்.ரா.வுக்கு 12000 readsஉம் ஜெயமோகனுக்கு 11990 reads உம் எனக்கு 3000 readsஉம் வரும். ஜெயமோகனுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எனக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை. பாராவுக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் மற்ற எழுத்தாளர்களும் இதை எளிதாக எடுத்துக் கொள்வார்களா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. இருந்தாலும் ஒரு ஆன்மீகப் பயிற்சிக்கு எழுத்தாளர்களைப் பயிற்றுவிக்கும் பிஞ்ஜ் செயலி இளைஞர்களின் இந்தச் செயலுக்கு என் கரகோஷங்கள்…