மெஜந்த்தா

நான் வண்ணங்களின் ரசிகன். பிஸ்மில்லா பாடலை தினமும் முப்பது தடவையாவது கேட்டு விடுவேன். எழுதிக் கொண்டிருக்கும்போது அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கைலாஷ் அணிந்திருக்கும் வாடாமல்லி நிறச் சட்டைத் துணியை எங்கேயாவது பார்த்தால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் வாங்கி விடுவது என்ற வெறியில் இருக்கிறேன். நாளை என்பதே நம் கையில் இல்லை என்கிறார் புனித். ஆனால் ஹெடோனிஸ்டுகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டம்தான். கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் வரும் குள்ளன் தன் காதலியிடம் (வேசி மடம் என்று நினைக்கிறேன், பார்த்துப் பல காலம் ஆகி விட்டது) இந்த நிமிடமே வாழ்வின் கடைசி நிமிடம் என்று நினைத்துத்தான் உன்னைப் புணர்கிறேன் என்பான். அதுதான் என் வாழ்வின் தாரக மந்திரம். ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டத்துக்குரியது. அவ்ளோதான். மெஜந்தா நிறத் துணி, மறக்காதீர்கள். டிஸம்பர் பதினெட்டு அன்று அணிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இறைவன் அனுமதித்தால்… இன்ஷா அல்லாஹ்.

https://www.youtube.com/watch?v=w1sqYgnwEqI