மனுஷ் பாதிப்பில் சில கவிதைத் தலைப்புகள்!

ஹமீது என்னிடம் நட்பில் இருந்த போது என் புத்தகங்களுக்கு அவர்தான் தலைப்பு வைப்பார். காமரூப கதைகள் அவர் வைத்த தலைப்புதான். காமரூபக் கதைகள் என்று அவர் வைத்த தலைப்பில் நடுவில் உள்ள க்-ஐ நான் நீக்கினேன். அவ்வளவுதான். இலக்கணப்படி க் வர வேண்டும். ஆனால் நான் அவ்வப்போது இலக்கணத்தை மீறுவேன்.

இப்போது ஹமீதின் பதின்மூன்று கவிதைத் தொகுதிகளின் தலைப்புகளையும் பார்த்தேன். எல்லா தலைப்புகளையும் நான் சமீப காலத்தில் நேர் வாழ்வில் புழங்கியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி என்னுடைய தலைப்புகள் சில உள்ளன. அவை:

ஃபோனை கட் பண்ணுங்க.

இனிமேல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டாம்.

என்னை நீங்க நம்பவே இல்லேல்ல?

உங்களுக்கும் என்னைப் பிடிக்காமப் போச்சு.

என்ன, ஓடுதா?

ஆமா, ஃபோட்டோல இருக்கிறது யாரு?

கொஞ்சமாவது உண்மை பேசுங்களேன்.

பார்த்து… ஜாக்கிரதை.

வயதுக்குத் தகுந்தாற்போல் இருக்க வேண்டாமா?

உங்கள் நன்மைக்காகவே சொல்கிறேன்.

நான் அ-செக்‌ஷுவல்.