சிங்கள கலாச்சார சூழல் -1

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தைப் போட்டு அடிதடியான போதே முடிவு செய்து விட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழில், தமிழ்நாட்டில் நாடகம் போட முடியாது என்று. ஏன் என்று நண்பர்கள் கேட்கும்போதெல்லாம் என் நாடகத்தில் நடிப்பவர்களின் உடை இங்கே உள்ள கலாச்சாரவாதிகளால் தாங்க முடியாததாக இருக்கும், சமயங்களில் பாத்திரங்கள் நிர்வாணமாகக் கூட வருவார்கள் என்பேன். நல்ல காலம், என் கலை எழுத்து என்பதாலும், தமிழர்கள் வாசிப்பை வெறுப்பவர்கள் என்பதாலும் நான் உயிரோடு இருக்கிறேன். ஏனென்றால், பின்வரும் இணையதளத்தில் வரும் கதாபாத்திரங்களின் ஆடைகளைப் பாருங்கள். இது தமிழ்நாட்டில் சாத்தியமா? இலங்கையின் தமிழ்ச் சூழலில் சாத்தியமா? இப்போதுதான் யாழ்ப்பாணத்தில் எல்ஜிபிடி ஊர்வலமே நடந்திருக்கிறது.

சென்ற கட்டுரையில் சிங்கள கலாச்சார சூழல் எப்படி இருக்கிறது என்று எழுதினேன். இன்று கே.கே. Solanas Archive என்ற இணைய தளத்தை அனுப்பி வைத்திருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று பாருங்கள். அந்த நாடகத்தின் பிரதான பாத்திரமாக வருபவர் பெயர் Nadeeka Bandara.


https://solanasarchive.blogspot.com/2020/10/blog-post.html