Hello CharuHow are you? Its been a while.
I read about the cure you got from a Siddha doctor.
I am sure you would have heard about ChatGPT/Bard, the generative AI tools that are widely leveraged by many industries for many purposes.
I heard a blog post by Prof Rajeev Srinivasan, when on an experiment on Cures they didnt find any reference to Ayurveda (or Siddha for that matter) from those tools. Which basically means those tools do not have exposure (or training as it is called) to those two forms of Medicines. I think it is important professionals like those doctors get exposure to such tools, and use their knowledge to train (or upload their study materials) to those tools for future generations.
I am not sure your about relationship with that doctor, and if he would even listen to such suggestions but I thought I can share this information with you, to see if he would be willing to talk to professionals to participate in that exercise.
Please let me know.
Gopinath V
டியர் கோபிநாத்,
நீங்கள் சொல்வது நாணயத்தின் ஒரு பக்கம். ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், நோயுள்ளவர்கள்தான் மருத்துவரைத் தேடிப் போக வேண்டும். சித்தா, ஆயுர்வேதம் பற்றி மக்களுக்குத் தெரியும். ஆனாலும் அவர்களுக்கு அலோபதிதான் வேண்டும். சித்தா, ஆயுர்வேதா ஆகியவற்றுக்கு பெரும்பான்மையான மக்கள் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு அலோபதி மருத்துவர் சொன்னார், அவரிடம் வருகின்ற நூறு நோயாளிகளில் 95 பேர் கடும் சர்க்கரை வியாதியோடு வருகிறார்களாம். அது கூடப் பிரச்சினை இல்லை. அவர் சொல்லும் எதையுமே அவர்கள் பின்பற்றுவது இல்லை.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் இரும்பைப் பொன்னாக்கும் வித்தையை மறைத்து விட்டார்கள். இன்றைக்கும் வெள்ளியங்கிரியில் உள்ள சித்தர் பலர் வெறும் ஒரு இலையைத் தின்று விட்டுப் பத்து நாள் பசியற்று இருக்கிறார்கள். ஒரு இலையை எரியூட்டினால் இருபத்து நான்கு மணி நேரம் எரிகிறது. ஒரு கிழங்கின் பொடியைத் தின்றால், நூறு பேரைத் திருமணம் செய்து கொள்ளலாம் போல் இருக்கிறது. (பெயர் தெரியும், நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், ஆனாலும் பெயரைச் சொல்ல மாட்டேன்.) இப்படி எத்தனையோ இருக்கிறது. போகர், கோரக்கர் என்று எத்தனையோ சித்த புருஷர்கள் மிகப் பெரும் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் நம்முடைய பிரிட்டிஷ் அறிவை வைத்துக் கொண்டு தமிழின் பாரம்பரிய வைத்தியத்தைக் குறை கூறலாகாது.
என்னுடைய மிக நெருங்கிய நண்பர் (சீனி அல்ல) தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். அவரிடம் நான் மருத்துவர் பாஸ்கரன் பற்றிய விவரத்தைக் கொடுத்தேன். அவர் மருத்துவரிடம் செல்லவில்லை. ஒரு யோகா நிறுவனத்திடம் போயிருக்கிறார். அந்த நிறுவனம் வணிக மயமாகி ரொம்ப நாள் ஆகிறது. யோகா கூட நண்பர் நான் சிபாரிசு செய்த சௌந்தரிடம் செல்லவில்லை. நிறுவனத்திடம்தான் போகிறார்.
மனிதர்கள் எப்படித் தெரியுமா கோபிநாத்? கையில் வைரத்தை எடுத்துக் கொடுத்தால் கூட “இது டூப்ளிகேட், ஏமாற்றுகிறாய்” என்று சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். டூப்ளிகேட்டுகளின் காலத்தில் ஒரிஜினலுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடுகிறது.
தூக்கமின்மை சாதாரணமாக இருந்தால் யோகா போகலாம். தப்பே இல்லை. ஆனால் அசாதாரண நிலையில் இருந்தால் சித்தாதான். மேலும், சித்தாவை நான் மருந்து என்று பார்க்கவில்லை. மருந்து என்றால், தலை வலிக்கிறது. ஸாரிடான் போட்டால் போய் விடுகிறது. அதற்குப் பேர்தான் மருந்து. ஆனால் சித்த மருத்துவம் தலைவலியின் காரணத்தைக் கண்டு பிடித்துப் போக்குகிறது. அடியோடு போக்குகிறது. அதைச் செய்யும் மூலிகையை நான் மருந்து என்று சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது பெயர் வையுங்கள் அதற்கு.
சித்த மருத்துவரும் சென்னையில் உள்ள இம்ப்காப்ஸ் கழகத்தின் இயக்குனருமான பாஸ்கரனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சென்னை வருகிறார். முகவரி, 19-A, பாரதி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை. தொலைபேசி 6379698464