நேற்று கேகே பற்றி எழுதியிருந்தேன். அவர் 39 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஸர்ப்பயா கதையை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கதையினால்தான் அவரை ஸர்ப்பயா என்றே அழைக்கிறார்கள். நான் படித்த எல்லா ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகளிலும் ஆகச் சிறந்ததாக இருந்தது இந்தக் கதை. ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த அளவுக்குத்தான் முடியும். கேகேயின் சிங்களம் நிறைய சிலேடைகளும் வார்த்தை விளையாட்டுகளும் நிறைந்தது என்கிறார்கள். அவர் ஆங்கிலத்தில் எழுதிய Cunt-try என்ற கவிதையைத்தான் என் நாவல் பெட்டியோவில் சேர்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலேயே. கேகேயின் இன்னொரு கதையும் படித்தேன். இங்கே தமிழில் மேஜிகல் ரியலிஸம் என்று ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கேகேயின் Muddy Dirt smeared on a White Cloud என்ற கதையையும் படித்தேன். லாசராவின் ஜனனியை விடவும் சிறந்த கதை. ஜனனியை இந்திய ஆன்மீகம் இட்டுச் செல்லும். கேகேயின் கதை முழுக்க முழுக்க பின்நவீனத்துவக் கதை. அதுவும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். படு கலகமான கதை. நதீகா பண்டாரவின் நாடகங்களைப் போல் இருந்தது கேகேயின் கதை. நதீகாவின் நாடகங்கள் சமகாலத்தவை. கேகே 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறார்.
K.K. Saman Kumara: ANIMA IN PHALLIC BLISS
பின்வருவது ஸர்ப்பயா கதை
“Sarpayaku Ha Satanveda” (Struggle with a Serpent) | Sri Lanka Guardian
பின்வருவது கேகேயின் இணையதளம்:
https://solanasarchive.blogspot.com/2019/10/kk-saman-kumara-anima-in-phallic-bliss.html
பின்வருவது நதீகாவின் நாடகக் காட்சிகள்:
බාක්තීනියානු සැණකෙළිකරණය සහ ‘තෙත්භූමි’ (solanasarchive.blogspot.com)