என்னுடைய நேரம்

அவந்திகாவின் ஒரு பழக்கம் என்னவென்றால், எந்தப் பணிப்பெண் வந்தாலும் அவர்கள் அவளுடைய எதிர்பார்ப்புக்குத் தோதாக இல்லாவிட்டால் நிறுத்தி விடுவாள். அவளுடைய எதிர்பார்ப்புக்கு நூற்றுக்கு நூறு தோதான எடுபிடி நான்தான். பணிப்பெண்ணை நிறுத்தி விட்டால் எல்லா எடுபிடி வேலையும் நான்தான் செய்ய வேண்டும். முக்கியமான எடுபிடி வேலை, பாத்திரம் தேய்ப்பது, குக்கரில் சோறு பருப்பு வைப்பது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது. இது எல்லாம் எனக்கு ஒரு மூன்று மணி நேரம் ஆகும்.

இந்த மூன்று மணி நேரத்தையும் எனக்கு மிச்சம் பிடித்துக் கொடுக்கிறாள் ஒரு பெண். புஷ்பா என்று பெயர். எங்களுக்கு அவளை பத்து வயதிலிருந்தே தெரியும். நாங்கள்தான் படிக்கவும் வைத்தோம். மேல் படிப்பு படிக்க வைக்கலாம் என்று இருந்த போது பள்ளிப் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொண்டாள். புஷ்பா அவந்திகாவுக்கு என்னை விடத் தோதான ஆள். மாலை நேரமும் வந்து இரண்டு மணி நேரம் வேலை செய்கிறாள். மொத்தம், ஐந்து மணி நேரம் எனக்கு மிச்சம்.

இப்போது புஷ்பாவின் மகனுக்கு ஐந்து வயது. நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டுமாம். ஆண்டுச் செலவு 40000 ரூ. இப்போது கட்ட வேண்டும். நான்தான் கட்ட வேண்டும். இல்லாவிட்டால், புஷ்பா வேறு வீடு போவாள். என்னுடைய மூன்று மணி நேரம் எடுபிடி வேலையில் போகும். அதனால் நானே கட்டுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.

பல அன்பர்கள் குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் இந்த உதவியைச் செய்தால் என் பயணச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் அவசியம் வராது.

ஒரு முக்கியமான குறிப்பு: யாரும் தன்னுடைய முழுச் சம்பளப் பணத்தையும் அனுப்பி வைத்து என்னை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள். நான் இலங்கையில் இருக்கும்போது ஒரு நண்பர் அப்படிச் செய்து விட்டார். இன்னமும் என் மனம் அதனால் சங்கடத்தில் இருக்கிறது. முடிந்தவர்கள் உதவுங்கள். இதற்காக என் மீது புழுதி வாரித் தூற்றுபவர்களின் வசைகளைக் கேட்க எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். வசைகளுக்கு: charu.nivedita.india@gmail.com

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai