கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பான் பற்றிய செய்திகள் என் முயற்சி இல்லாமலேயே என் பார்வைக்கு வந்து கொண்டேயிருந்தன. ஜப்பானிலேயே வசிப்பவர்கள், ஜப்பானில் இரண்டு மூன்று ஆண்டுகள் வசித்து விட்டு வந்தவர்கள், நீண்ட காலப் பயணிகள், அடிக்கடி ஜப்பான் சென்று வருபவர்கள் என்று பலரும் தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எனக்கே ஆச்சரியமாக இருக்கும், நாமோ ஜப்பானே செல்லப் போவதில்லை, நம் காதில் ஏன் இத்தனை ஜப்பான் செய்திகள் வந்து விழுகின்றன என்று.
நான் படித்த செய்திகள், பார்த்த சினிமா, படித்த சமகால ஜப்பானிய இலக்கியம் எல்லாமே ஒரு பொதுக் கருத்தைக் கொண்டிருந்தன, நேற்று படித்த ரா. செந்தில்குமாரின் ஷிபுயா க்ராஸிங் சிறுகதை உட்பட. அது என்ன?
ஜப்பான் தன் ஆன்மாவை இழந்து விட்டது. இத்தனைக்கும் லட்சக்கணக்கான ஜப்பானியர் இலக்கிய வாசகர்கள். கோடிக்கணக்கான என்று கூட சொல்ல்லாம். முராகாமியின் புதினங்கள் உதாரணம். இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும், சினிமாவையே தங்கள் மதமாகக் கொண்டுள்ள ஃபிலிஸ்டைன் கும்பலான தமிழ் ஜனமே ஜப்பானியரைப் போல் தம் ஆன்மாவை இழக்கவில்லையே?
என்ன காரணமாக இருக்க முடியும்?
நான் வாசித்த சமகால இலக்கியம், சினிமா, பல நூறு பேரின் நேரடி அனுபவக் குறிப்புகள் எல்லாவற்றையும் கொண்டு நான் ஒரே ஒரு முடிவுக்குத்தான் வர முடிகிறது. அது, ஜப்பானில் குடும்ப அமைப்பு சிதைந்து விட்டது. முக்கியமாக, பெண்கள் குடும்பத்தை விட்டு வெளியே வந்து விட்டார்கள். (எந்தக் கதையை எடுத்தாலும், எந்த சினிமாவை எடுத்தாலும் குழந்தைகள் விவாகரத்து ஆன பெற்றோரிடம்தான் வளர்கின்றன.) இன்னொரு விஷயம், ஜப்பானியப் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. அதே சமயம், சராசரி ஜப்பானியரின் ஆயுள் அதிகமாகி விட்டது. அதனால் சமூகத்தில் இளைஞர்களின் கூட்டம் குறைந்து முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட்து.
நான் ஏதோ ஹிந்துத்துவா மாதிரியும் பழமைவாதி மாதிரியும் எழுதுவதாக நினைக்க வேண்டாம். நான் குடும்ப அமைப்பை எதிர்ப்பவன். ஆனால் குடும்பத்தைச் சிதைத்து விட்டு அதற்கு மாற்று எதுவும் காண இயலாமல் குடியிலும், தற்கொலையிலும், மனநோயிலும், தனிமையிலும் வீழ்வதையே நான் குறிப்பிடுகிறேன். ஜப்பானில் இன்று பதினைந்து லட்சம் பேர் ஹிக்கிகோமோரிகளாக வாழ்கிறார்கள். ஹிக்கிகோமோரி என்பது சமூகத்திலிருந்து விலகி, வீட்டுக்குள்ளேயே தனித்து வாழ்பவர்களைக் குறிக்கும் வார்த்தை.
ஜப்பானின் இன்னொரு பிரச்சினை, தற்கொலை. ஜப்பானியக் கதை எதை எடுத்தாலும் அதில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார். ரா. செந்தில்குமார் தொகுப்பில் பல கதாபாத்திரங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன. தோக்கியோ நகரில் ஒரு மலேஷியத் தமிழர் ஒரு ரயில் நிலையத்தில் ரயிலுக்காகக் காத்திருக்கிறார். அது ஒரு திங்கட்கிழமை. ரயில் ஒரு மணி நேரம் தாமதம் என்ற அறிவிப்பு வருகிறது. கதைசொல்லியான தமிழரும் அதே பிளாட்ஃபாரத்தில் நிற்கிறார். இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இப்படித்தான் ஆகிறது என்கிறார் கதைசொல்லி.
ஏன்?
வெள்ளிக்கிழமை மாலை அவருக்கு வேலை போயிருக்கும். சனி, ஞாயிறில் குடி. திங்கட்கிழமை வீட்டை விட்டுக் கிளம்பியவருக்கு எங்கே போவது என்று தெரியாத நிலையில் தான் தினமும் செல்லும் ரயிலுக்கு முன்னே குதித்து விடுகிறார்.
அன்றைய தினம் மலேஷியத் தமிழரும் கதைசொல்லியும் நட்பாகி அதற்குப் பிறகு அவ்வப்போது சந்தித்துக் குடிக்கிறார்கள். மலேஷியத் தமிழரின் மனைவியும் குழந்தையும் மலேஷியாவில் இருக்கிறார்கள். மனைவியும் குழந்தையும் தோக்கியோ வரும் போது அவர் குதூகலமாக இருக்கிறார். பிறகு அவரும் ஏனைய தோக்கியோவாசிகளைப் போல் ஒரு திங்கட்கிழமை ரயிலின் முன்னே குதித்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்.
***
ஹாருகி முராகாமியை நான் ஜனரஞ்சக எழுத்தாளராகவே கருதுகிறேன். தமிழில் சுஜாதா மாதிரி. ஆனாலும் அவரது நார்வேஜியன் வுட் ஒரு சிறந்த நாவல். அது அவரது முதல் நாவலும் கூட. அவருடைய சில சிறுகதைகளும் உலகத் தரமானவை. ஆனால் உலகமே போற்றிக் கொண்டாடும் அளவுக்கு அவரிடம் சரக்கு இல்லை. அப்படியும் ஏன் உலகமே போற்றிக் கொண்டாடுகிறது? இப்போதெல்லாம் எனக்கு அதிர்ஷ்ட்த்தில் தீவிர நம்பிக்கை வந்து விட்டது. இல்லாவிட்டால் இலக்கியத்தில் பெருமாள் முருகன், சினிமாவில் அட்லி, நெல்சன் போன்ற அதிசயங்களெல்லாம் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்?
ஜப்பானிய மொழியில் Ryu Murakami என்று ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா பின்நவீனத்துவ எழுத்தாளர்களைப் போலவே இவரையும் வெகுவாக பாதித்தது மார்க்கி தெ ஸாத் என்கிறார். (அடியேனும் அவ்வாறே.) அதன் காரணமாகவே ரியூ முராகாமி மீது எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அவரது சில பல கதைகள் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு படம் லவ் அண்ட் பாப்.
இப்படி ஒரு படத்தை என் சினிமா அனுபவத்தில் கண்டதில்லை. அந்த அளவுக்கு உலகத் தரம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஒளிப்பதிவில் இப்படி ஒரு புரட்சியை இதற்கு முன்பு நான் அனுபவம் கொண்டதில்லை. ஸோனி ஹேண்டிகேம் மூலம் எடுத்திருக்கிறார்கள். வார்த்தைகளால் விளக்கத் தெரியவில்லை. நீங்களே படத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். என்னுடைய கர்னாடக முரசு, ஜோக்கர் போன்ற கதைகளை நீங்கள் படித்திருந்தால் இந்தப் படத்தின் ஒளிப்பதிவைப் புரிந்து கொள்ளலாம். அக்கதைகள் ஒரு உன்மத்த மொழியில் எழுதப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் கேமரா ஒரு உன்மத்த நிலையில் விளையாடுகிறது, ரகளை செய்கிறது.
இன்றைய பெண்கள் தம்மை செக்ஸ் பண்டமாகவே வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். தங்கள் உடலை ஆடவரின் காட்சிப் பொருளாக்குவதிலேயே பெரும் ஆர்வம் காண்பிக்கிறார்கள். ஜப்பானிய மாணவிகளின் ஸ்கர்ட் மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதை இந்தப் படத்தின் கேமரே துல்லியமாகக் காண்பிக்கிறது. படம் முழுவதுமே கேமரா தரையிலிருந்துதான் காட்சிகளைப் பதிவு செய்கிறது. செக்ஸ் இன் பஸ் என்பது போன்ற செக்ஸ் தளங்களில்தான் இம்மாதிரி கேமரா தரையிலிருந்து படம் பிடிக்கும். தரைத் தளத்திலிருந்து இல்லாவிட்டால் சில சமயங்களில் மேலே விதானத்திலிருந்தும் எடுக்கிறது கேமரா. மனித உயரத்திலிருந்தே எடுக்கப்படவில்லை.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஹிரோமி தன்னுடைய மற்ற மூன்று தோழிகளைப் போலவே எஞ்ஜோ கொஸாயில் (பணம் வாங்கிக் கொண்டு செல்லும் டேட்டிங்) ஈடுபடலாம் என்று முடிவு செய்கிறாள். அவளுக்கு ஒரு விலை உயர்ந்த மோதிரம் வாங்க வேண்டியிருந்தது. பள்ளிச் சிறுமிகளோடு டேட்டிங் செல்வதில் ஆர்வமாக இருக்கும் மத்திய வயது ஆண்கள் அதற்காகவே செயல்படும் இணையதளங்கள் மூலம் ஹிரோமியைத் தொடர்பு கொள்கிறார்கள். அம்மாதிரி டேட்டிங்கில் அதிகம் செக்ஸ் இருப்பதில்லை. மால்களுக்கு ஒன்றாகச் செல்வது, ஒன்றாகச் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது போன்றவையே அந்த மத்திய வயது ஆடவர்கள் விரும்புவது. அதிலும் பல வகையான மென்வக்கிரங்களைக் காண்பிக்கிறார்கள் அவர்கள். ஒருத்தன் ஹிரோமியை திராட்சைப் பழங்களை சப்பிச் சப்பிப் போடச் சொல்கிறான். சில சமயங்களில் பாலியல் வக்கிரங்களிலும் ஈடுபடுகிறார்கள். ஒருத்தன் ஹிரோமியை ஒரு செக்ஸ் ஷாப்புக்கு அழைத்துச் சென்று அங்கே அவளை அவனுக்குக் கர மைதுனம் செய்ய வைக்கிறான். இதை எதிர்பார்க்காத ஹிரோமி கை முழுக்க விந்துவுடன் வெளியே ஓடுகிறாள். அவளால் அந்த அருவருப்பு உணர்ச்சியைத் தாங்க முடிவதில்லை.
ஆனால் எக்கச்சக்கமாகப் பணம் கிடைக்கிறது. ஒருவன் ஒரு மணி நேரத்துக்கு ஐம்பதாயிரம் யென் தருகிறான். ஆனால் செக்ஸ் இல்லை. இப்படியே அவளுக்கு ஒன்றரை லட்சம் யென் சேர்கிறது.
படத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் narrative. ஹிரோமிக்கு என்னவெல்லாம் மெஸேஜ் வருகிறது, இவள் என்னவெல்லாம் பதில் சொல்கிறாள் என்றே படத்தில் பத்துப் பதினைந்து நிமிடம் ஓடுகிறது.
”எனக்குப் பெரிய முலைகள் இல்லை, நான் ஒல்லியான பெண். என் மீது ஈடுபாடு கொள்ளும் ஆண்கள் தொடர்பு கொள்ளவும். என் தொலைபேசி எண்:———–”
“சந்திப்பின்போது என் முலைகளைத் தொடக் கூடாது.”
பதிலுக்கு ஆடவர் கொடுக்கும் மெஸேஜுகள் இப்படி இருக்கின்றன. ஆனால் ஹிரோமி அவளுக்குப் பிடிக்காத மெஸேஜாக இருந்தால் உடனே அடுத்த மெஸேஜுக்குத் தாவி விடுகிறாள்.
ஒரு மெஸேஜ்: கீழே முடி இருக்கக் கூ (அதற்கு மேல் படிப்பதில்லை.)
மாலுக்குப் போய் சுற்றினால் போதும். 50000 யென் தருகிறேன். ஆனால் நீ பதினைந்து வயதுக்குக் கம்மியாக இருக்க வேண்டும்.
எனக்குத் தேவையான பெண்ணுக்குப் பெருத்த முலை… (அதற்கு மேல் படிப்பதில்லை.)
எனக்கு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பெண் தேவை. ஆனால் என்னோடு இருக்கும்போது அம்மணமாக இருக்க வேண்டும். நான் பர்வர்ட் இல்லை. உன்னை எதுவும் செய்ய மாட்டேன்.
எனக்கு மிகவும் அழகான பெண் தேவை. ஆனால் மாலை ஏழு மணிக்குள் தொடர்பு கொள். அதற்கு மேல் நான் நைட் ட்யூட்டிக்குப் போக வேண்டும்.
இப்படியே நூற்றுக்கணக்கான மெஸேஜுகள் திரையில் ஓடிக் கொண்டேயிருக்கின்ற்ன.
படத்தின் இறுதியில் ஒருவன் வருகிறான். மற்ற ஆடவர்களைப் போல் மத்திய வயது அல்ல. இளைஞன். அவன்தான் அவளிடம் நயமாகவும் சுவாரசியமாகவும் பேசுகிறான். கடவுள் இப்போது உன் முன்னே தோன்றி ஒரு வரம் தருகிறேன் என்று சொன்னால் என்ன கேட்பாய் என்கிறான்.
அவள் பதில் சொல்லாமல் யோசிக்கிறாள்.
“பணம்தானே கேட்பாய்?”
“ம்ஹும். நிச்சயம் பணம் கேட்க மாட்டேன். எனக்குப் பணம் தேவை இல்லை.”
“பிறகு ஏன் இந்த டேட்டிங் வேலையில் ஈடுபடுகிறாய்?”
“எனக்கு ஒரு மோதிரம் தேவைப்பட்டது. அதனால்தான்.”
”சரி, கடவுளிடம் வேறு என்ன கேட்பாய்?”
“என் முலைகள் பெரிதாக வேண்டும் என்று கேட்பேன்.”
பிறகு அவன் அவளை ஒரு லவ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே அவள் அவன் முன்னே நிர்வாணமாகக் குளிக்கும்போது கத்தியை எடுத்துக் கொண்டு போய் மிரட்டி நான் சொல்வதைக் கேள், இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்கிறான். அவளுடைய இரண்டு கால்களையும் விரித்துத் தன் தோள் மீது போட்டுக் கொண்டு சொல்கிறான்.
“பார், நீ அம்மணமாக இருக்கிறாய். நான் முழுசாக ஆடை அணிந்திருக்கிறேன். உன் வயதில் நீ இங்கே இருக்கக் கூடாது. உனக்கு என்னை யாரென்றே தெரியாது. எவனோ ஒருத்தனான என் முன்னே அம்மணமாக்க் கிடக்கிறாய். ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் ஒவ்வொரு பெண்ணோ ஆணோ இருக்கிறார்கள் இல்லையா? அப்படி ஒருவன் உனக்காக எங்கோ இருப்பான். நீ இப்படி என் முன்னே அம்மணமாகக் கிடப்பது தெரிந்தால் அவன் மனம் என்ன பாடு படும்? அழுது அழுது அவன் தற்கொலை கூட செய்து கொள்ளக் கூடும். அவனுடைய வாழ்வின் முக்கியமான பெண் இப்படி யாரென்றே தெரியாத ஒருத்தன் முன்னே அம்மணமாகக் கிடக்கிறாள் என்று தெரிந்தால் அவன் நிலைமை என்ன ஆகும் என்று யோசித்துப் பார்க்கிறாயா? உன்னால் முடியாது. உன்னைச் சேர்ந்த யாருமே உன்னுடைய இந்த நிலையை ரசிக்க மாட்டார்கள். உன்னுடைய இந்த இழிசெயலின் மூலமாக நீ ஒருத்தனைச் சாக அடிக்கிறாய்… முதலில் உன்னை ரேப் பண்ணிக் கொன்று விட்டு உன் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது என் மனம் மாறி விட்டது. உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.”
ஆனால் இன்றைய ஜப்பானின் நிலைமை என்னவென்றால், ஹிரோமிக்கு அந்த இளைஞன் சொன்னது எதுவுமே புரியவில்லை.
அவள் வைத்திருக்கும் மொபைல் ஃபோன் அவளுக்கு ஒரு எழுத்தாளன் கடனாகக் கொடுத்தது. அவனிடம் போய் அந்த இளைஞன் சொன்னதைச் சொல்லி, அவன் சொன்னதன் அர்த்தம் என்ன என்று கேட்கிறாள். கதை முடிகிறது. இந்தப் படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் – 1998இல் வெளிவந்தது என்பது இன்னும் ஒரு ஆச்சரியம். இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஜப்பானிய மனித உறவுகள் இன்னும் சீர்குலைவை நோக்கித்தான் போயிருக்கும் என்று தோன்றுகிறது. அப்படித்தான் இப்போதைய ஜப்பானிய இலக்கியமும் சினிமாவும் தெரிவிக்கின்றன. உலக அளவில் porn industry-இல் முதலிடத்தில் இருப்பது ஜப்பான்தான். அதிலும் பள்ளி மாணவிகள்தான் அதில் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். காரணம், மதிப்பீடுகளின் வீழ்ச்சி. சுலபப் பணம்.