Human Brains: Prada Foundation

Prada Foundation வெளியிட்டுள்ள இந்தப் பெரிய தொகுப்பில் என்னுடைய சிறுகதை வெளியாகியுள்ளது. Tandav at Tadaka என்பது கதையின் தலைப்பு. 986 பக்கங்கள். விலை: 117 யூரோ. இதுவே 27 சதவிகிதத் தள்ளுபடியில். மலிவுப் பதிப்பாக இருப்பதால் வாங்கிக் குவிப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு பிரதி ஃபெடெக்ஸ் மூலமாக வந்துள்ளது. விலாசத்தில் சாரு நிவேதிதா என்று உள்ளது, உங்கள் ஆதார் கார்டில் கிருஷ்ணசாமி அறிவழகன் என்று உள்ளது, அதனால் தர மாட்டோம். முப்பது நாட்களுக்கு மேல் எங்களிடமே இருந்தால் நீங்கள் 5000 ரூ. கட்ட வேண்டும் என்று ஃபெடக்ஸ் என்னை மிரட்டியிருக்கிறது. கஸ்டம்ஸிலும் ஒத்துழைப்பு இல்லை. மோதியின் செயலாளருக்கு எழுதியிருக்கிறேன், உதவி செய்ய முடியுமா என்று. லண்டனில் வெளியாகி இருப்பதால் லண்டன் மகாஜனங்கள் வாங்கிக் குவியுங்கள். என் கதையோடு சல்மான் ருஷ்டியின் கதையும் இருக்கிறது. எது நன்றாக இருக்கிறது என்று சொல்லுங்கள். கதையை அவர்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து என்னிடமிருந்து வாங்கியிருப்பதால் தமிழ் மூலத்தை வெளியிட முடியாத நிலையில் இருக்கிறேன்.

மீதி விவரம் கீழே:

Human Brains : Prada: Amazon.co.uk: Books