ஆக்ஸிஸ் வங்கிப் பிரச்சினைக்கு ஒரு நண்பர் ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். ஆக்ஸிஸில் இருப்பதை ஜிபே மூலம் ஐசிஐசிஐக்கு மாற்றிக் கொள்ளலாம். நல்ல யோசனை. ஆனால் நான் கேட்டது, ஆக்ஸிஸிலிருந்து டெபிட் கார்ட் வரவழைப்பதற்கு என்ன பண்ணலாம்? ஏனென்றால், இன்னும் ஒரு மாதம் கழித்துப் போனால், மறுபடியும் விண்ணப்பத்தைப் பதிந்து கொண்டு கார்டை அனுப்ப மாட்டார்கள். மறுபடியும் போய்க் கேட்டால், இன்னும் ஒரு மாதத்துக்கு நீங்கள் புதிதாக விண்ணப்பம் வைக்க முடியாது என்பார்கள். தொலைந்து போன ஆக்ஸிஸ் வங்கி டெபிட் கார்டை புதிதாக வாங்க என்ன வழி? அதைத்தான் கேட்டேன். மூன்று மாதமாக அலைந்து கொண்டிருக்கிறேன்.
இன்று ஒரு நெருங்கிய நண்பர் கேட்டார், ஜப்பான் செல்கிறீர்களே, நான் செய்யக் கூடிய உதவி ஏதாவது தேவையா?
நான் ஒன்றுமில்லை என்றோ அப்புறம் சொல்கிறேன் என்றோ சொல்லி அந்தக் கேள்வியைத் தவிர்த்து விட்டேன்.
நண்பர் எனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறார். என்னுடைய மகாத்மா நண்பர்களில் ஒருவர்.
ஏன் அந்தக் கேள்வியைத் தவிர்த்தேன் என்றால், சில மாதங்களுக்கு முன்பு ஒரு நெருங்கிய நண்பரும் இதே கேள்வியைக் கேட்டார். ஏதாவது உதவி தேவை என்றால் கேளுங்கள் சாரு.
கடவுள் எனக்கு எல்லா சௌகரியங்களையும் அளித்திருக்கிறார். மாதத்தில் நான்கு நாள் விடுமுறை. வைன் குளியல். ஆரோக்கியம். உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கும் தோழிகள். என் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட, எனக்கு எப்போதுமே பக்கபலமாக இருக்கும் நண்பர்கள். டிப்ரஷன் மயிர் மட்டை போன்ற பிரச்சினைகள் இல்லாத நிர்மலமான மனம். படுக்கையில் படுத்தவுடன் அடித்துப் போட்டது போன்ற நித்திரை. சித்தாவுக்கு ஒருவர் (பாஸ்கரன்), அலோபதிக்கு ஒருவர் (ஸ்ரீராம்) என்று இரண்டு பாதுகாவலர்கள். எந்த நிலையிலும் சந்தோஷமாகவே இருக்கும் மனம். வேறு என்ன வேண்டும்? ஒன்றே ஒன்றுதான் குறை. தேவைக்கான பணம் இல்லை. பணம் ஒன்றுதான் இல்லை. மற்ற எல்லாமும் நிறைவாக இருக்கிறது.
மாதாமாதம் ஏதேனும் ஒரு மிகச் சிறிய தொகையை அனுப்பி வையுங்கள் என்றேன்.
உதவி வேண்டுமா என்று கேட்ட நண்பரிடமிருந்து பதிலே இல்லை.
பிறகு நேரில் பார்த்த போது “இப்போது கொஞ்சம் பணக்கஷ்டம்” என்றார். அடடா, நண்பரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கி விட்டோமே என்று வருத்தமடைந்தேன். நண்பர் ஒரு தொழிலதிபர். ஏன், தொழிலதிபர்களுக்குப் பணக்கஷ்டம் வராதா?
இது எல்லாமே இன்று நண்பர் கேட்டதும் ஞாபகம் வந்தது.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்ப நினைவூட்டுகிறேன்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai
***