தரமான தாம்பத்திய வாழ்வுக்கான ஒரு கையேடு குறித்து மேலும் ஓர் எதிர்வினை: ஷ்ருதி

Hey Charu!

I wanted to take a moment to share my thoughts on the advice we’ve been discussing about the welfare of marital relationships, particularly from the perspective of men.

At the core of any healthy relationship or partnership, whether it’s a marriage or a committed bond, lies the fundamental principles of trust and honesty rather than duplicity or deception. When a spouse engages in an extramarital affair and finds themselves unable to leave it behind, the most responsible course of action is to confront and communicate this situation openly to their partner. By doing so, they allow their partner to understand the reality of the situation rather than live under a false pretense of fidelity.

It’s important to recognize that partners deserve transparency; being misled or betrayed can inflict deep emotional wounds that linger long after the truth is revealed. Each individual has the right to choose whom they wish to share their lives with, and this decision isn’t confined to a single moment or person. Relationships can evolve, and people sometimes grow apart; however, honesty about one’s feelings, including the reasons for a breakup, is crucial. Cheating only prolongs the suffering and denies both parties the chance to find happiness elsewhere.

I personally believe that relationships should have the concept of “we are happy” rather than a self-centered “you are happy, and I am happy.” This shift in perspective can only happen with mutual respect, transparency, and open communication. Hiding inappropriate content—like sexting chats or intimate photos shared with colleagues—does not exemplify a strong relationship; rather, it reveals a lack of integrity and commitment.

While it’s ultimately an individual’s choice to engage in extramarital relationships, implementing various tactics to conceal such behavior is unacceptable. Honest communication is key. If one finds themselves at a crossroads where they are unable to remain faithful, it is far better to express the truth and move on, thereby allowing both parties to pursue happiness more healthily and respectfully.

Let’s prioritize truthfulness in our relationships and treat one another with the dignity we all deserve!

Shruti

விவாதத்தில் இருக்கும் இந்த விஷயம் பற்றி ரூபாஸ்ரீ எழுதியது, ரூபாஸ்ரீக்கு ஸ்ரீ எழுதிய பதில், இப்போது ஷ்ருதி எழுதியிருப்பது மூன்றையும் படித்தேன். இதில் ரூபாஸ்ரீ, ஷ்ருதி இருவரும் எழுதியிருப்பது காந்தியின் ராம ராஜ்யம் போலவும், கார்ல் மார்க்ஸ் கூறிய Ultimately State would wither away என்ற கனவு ராஜ்யம் போலவும்தான் எனக்குத் தோன்றுகிறது. எதார்த்த வாழ்வுக்கும் இவர்கள் பேசுவதற்கும் கடுகத்தனை தொடர்பும் இருப்பதாக என்னுடைய எழுபத்து மூன்று வயதில் நான் கண்டதில்லை. ஸ்ரீ எழுதிய நீண்ட பதிலை ரூபாவும் ஷ்ருதியும் தவிர வேறு யாரும் படிக்கவில்லை போல. ஆங்கிலத்தில் இருப்பதுதான் காரணம் என்று யூகிக்கிறேன். ஸ்ரீ எழுதியவற்றோடு என்னால் உடன்பட முடிகிறது.

மேலும் நான் அந்தக் கையேட்டை ஒரு பகடியாகவே எழுதியிருந்தேன். பொதுவாக பெண்கள் பகடி என்றால் ஒதுங்கி விடுவதையும் இத்தனை நாள் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது பெண்களுக்கான கையேடு எழுதினால் ஆண்கள் அத்தனை பேரும் என் குரல்வளையைக் குறி வைப்பார்கள். இந்த விஷயத்தில் நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. எனக்கென்று இந்த விஷயத்தில் தனிப்பட்ட அபிப்பிராயங்கள் எதுவும் கிடையாது. கண்டதைச் சொல்கிறேன். அவ்வளவுதான். நான் கூறுவதெல்லாம் தப்பு என்று நிரூபணமானால் என்னுடைய இந்த அபிப்பிராயங்களைக் கடுமையாக மறுத்து நாளையே வேறொரு கையேடு எழுதுவேன்.

ஷ்ருதி சொல்வதெல்லாம் என் அம்மா காலத்தில் இருந்தது. ரூபாவும் ஷ்ருதியும் அராத்து எழுதிய பொண்டாட்டி மற்றும் புருஷன் என்ற இரண்டு நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் இது பற்றிச் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை.

ஆனால் ஒன்று, ஷ்ருதி சொல்வது போல் நடைமுறைப்படுத்தினால் இந்தியாவில் அநேகமாக ஆயிரத்துக்கு 999 பேர் விவாகரத்து பெற்றுக் கொண்டு விடுவார்கள். அதில் மட்டும் எனக்கு சந்தேகமே இல்லை. அராத்து ஏன் இவ்விஷயத்தில் கல்லுளிமங்கனாக அபிப்பிராயம் சொல்லாமல் இருக்கிறார் என்று புரியவில்லை. நான் என் தனியறையில் புத்தகங்களோடு வசிப்பவன். அவர்தான் உலகில் திரிந்து மானுடர்களோடு தொடர்பில் இருக்கிறார். அவர் ஏதாவது சொல்லலாம்.

ஷ்ருதி