ஒரு குறுங்கவிதை

’கொலைக்குத் தண்டனை இல்லை’
அறிவித்தவுடன்
தன்னை அழித்துக்கொண்டான்
மனிதன்

நதிகள் பாடின
குளங்கள் சிரித்தன
மலைகள் மூச்சுவிட்டன
கடல்கள் நடனமாடின
மண்ணும் மிருகங்களும்
இன்பமுற்றன.