மேல்கூரை மின்விசிறி

யுவதிகள்
நாய்களையும் பூனைகளையும்
தம் காதலரையும்
தொட்டு
கொஞ்சி விளையாடுவதை
அடிக்கடி காண்கிறேன்
மோகினியிடம் கொஞ்சம்
தன்னிரக்க பாவனையுடன் சொன்னேன்
என்னை இதுவரை யாரும்
தொட்டு கொஞ்சி விளை
யாடியதில்லையென

அவள்,
நீதான் தொட்டவுடன் என்னை
மேல்கூரை மின்விசிறியைப் பார்க்க
வைத்து விடுகிறாயே
எங்கே விளையாடுவது
எங்கே கொஞ்சுவது
போடா இடியட்
என்று சொல்லியென்
கன்னத்தைக் கிள்ளினாள்

சே, அரிய வாய்ப்பை இழந்து போனேன்
அன்றைய தினமும் அவள்
மேல்கூரை மின்விசிறியையே
பார்க்க நேர்ந்தது