நிச்சலனத்தின் நிகழ்வெளி: புதுவை இளவேனில்

இந்த அரிய பொக்கிஷம் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. ‘

தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் குறித்த அரிய புகைப்படங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் புதுவை இளவேனில் எடுத்தவை. எல்லாமே கலைப் பொக்கிஷங்கள். ஒருவரின் தோற்றம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவரை இந்த உலகின் அதியற்புத மனிதராக தன் புகைப்படக் கலையின் மூலம் மாற்ற வல்ல ஒளிக்கலைஞர் புதுவை இளவேனில். இதுவரை என்னைப் புகைப்படம் எடுத்தவர்களில் ஆகச் சிறந்தவர் புதுவை இளவேனில். ராமேஸ்வரம் அழைத்துச் சென்று என்னைப் புகைப்படம் எடுத்தார். இந்த இணைய தளத்தின் முகப்புப் பக்கத்தில் இருப்பதும் புதுவை இளவேனில் எடுத்ததுதான். எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முந்தியவை என்பதால் இப்போதைய நூல்களில் அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்த முடியவில்லை. இப்போது என் அழகு கூடி விட்டதாக பல தோழிகள் கருதுகிறார்கள். ஆதலால் புதுவை இளவேனில் மூலம் மேலும் ஒரு ஃபோட்டோ செஷன் செய்ய வேண்டும். ஆனால் வெளியூர் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். பார்க்கலாம்.

நிச்சலனத்தின் நிகழ்வெளி தொகுப்பை நீங்கள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு அரிய பொக்கிஷம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நம்மிடம் தி. ஜானகிராமன், கு.ப. ராஜகோபாலன் போன்ற எழுத்தாளர்களின் புகைப்படங்கள் சரிவர இல்லை. பாரதியின் புகைப்படம் ஒன்றே ஒன்று இருப்பதெல்லாம் ஒரு கொடூரமான சமூக அவலம். அதைப் போலவே புதுமைப்பித்தன். இந்தத் தவறை சரி செய்ய வேண்டுமானால் இந்தத் தொகுப்பை வாங்க வேண்டியது நம்முடைய கடமை.

இந்த நூலை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. விலை 600/- இந்த நூலுக்கு இது மிகவும் குறைவான விலை. இந்த நூலுக்கு நிச்சயமாக 1200 ரூ. விலை வைத்திருக்க வேண்டும். 600 ரூ. என்பது மலிவு விலை போல் இருக்கிறது. புத்தகத்தைப் பார்த்தால் நான் சொல்லும் காரணம் உங்களுக்குப் புரியும்.

புதுவை இளவேனிலின் கைபேசி எண்: 9842382339

புத்தகம் கிடைக்குமிடம்:

Discovery Book Palace

1055 B, Muthusamy Salai,

K.K. Nagar West,

Chennai 600 678

Phone: 87545 07070