கவிதை


”கடந்த வாரக்
கவிதைகளை அனுப்பு”

“ஆ, உனக்கு எப்படித் தெரியும்?
என் இதயத்தில் ரகசியக் கேமரா
வைத்து விட்டாயா?”

“கனவுதான் என் ரகசியக் கேமரா
நனவில் நானொரு மூடன்
கனவில் தரிசி
சரி, என் கேள்விக்குப் பதில் சொல்”

”முடியாது”

சொன்னவள்
எனக்குத் தன்
உடல் பொருள் ஆன்மா
தந்தவள்
ஆக,
ஆக ரகசியமானது