நண்ப,
உனக்கு என் தோழி
பச்சைக்கண் பேரழகியைத் தெரியும்
அவள் என் அருகில் கூட அல்ல,
என் மடிமீது அமர்ந்தே பேசுவாள்
ஆனால்
அவள் என் எழுத்தைப் படித்ததில்லை
படி என்றேன்
காலக்கெடுவும் வைத்தேன்
அப்போதும் படிக்கவில்லை
நீங்கி விட்டேன் அவளை
ஆதலனினால், புரிந்து கொள்
உன்னை என்னருகே
அமர்ந்து கொள் என
அழைத்தது
உன்னை என் சிறந்த மாணாக்கனென
நினைத்தனால் மட்டுமே
வேறெந்தக் காரணமும் இல்லை