(இந்தக் கட்டுரையை பிரதியெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை சீரமைக்க இது ஒரு User’s Manualஆகப் பயன்படக்கூடும்)
கவி வாக்கு பலிக்காமல் போகாது என்பார்கள். மொட்ஸார்ட்டின் கடைசிப் படைப்பு ரெக்வீம். இது ஒரு Choral படைப்பு. சிம்ஃபனி என்பது இசைக்கருவிகளால் உருவாகும் படைப்பு. கோரல் என்பது குரல்களால் ஆனது. துணைக்கு இசைக்கருவிகள். ரெக்வீமை மொட்ஸார்ட்டினால் முடிக்க முடியவில்லை. இறந்து விடுகிறார். என்னுடைய கவிதை ரெக்வீமே என் கடைசி கவிதையாக ஆகி விட்டது. அதற்கு மேல் எழுதிய ரெண்டு கவிதைகள் ரெக்வீமிக்குத் துணை. பல நண்பர்கள் ஃபோன் செய்து கண்ணீர் விட்டபடி பேசினார்கள். ரோமியோ ஜூலியட்டைப் படிக்கும்போது – குறிப்பாக அதன் கடைசிக் காட்சியில் உங்களுக்குக் கண்ணீர் வரவில்லையானால் நீங்கள் கல் என்று பொருள். கல்லும் கசிந்துருகும் இடம் அது.
என் எழுத்து எல்லோருக்கும் உற்சாகத்தை மட்டுமே அளிக்க வேண்டும். யாருக்கும் மன உளைச்சல் ஏற்படக்கூடாது. அதிலும் எனக்குப் பிரியமானவர்களுக்கு ஒருபோதும் அப்படி நடக்கலாகாது.
இதுவரையிலான என் கவிதைகளில் விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா போன்ற போலிஷ் கவிஞர்களையும், சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கி, நிகானோர் பார்ரா, ரேமண்ட் கார்வர், ஜாக் ப்ரேவர் போன்றவர்களையும் தாண்டி விட்டேன். ஒக்தாவியோ பாஸ், பாப்லோ நெரூதா இருவரையும் நெருங்கி விட்டேன். இன்னும் எழுதியிருந்தால் இந்த இருவரையும் கூடத் தாண்டியிருப்பேன். என்னால் ஒருபோதும் தாண்ட முடியாதவர்கள் எஸ்ரா பவுண்ட் மற்றும் டி.எஸ். எலியட். ஆனால் அவர்களின் genre வேறு; என்னுடையது வேறு. அவர்களுடைய இருநூறு மைல் மாரத்தான் ஓட்டம். என்னுடையது நூறு மீட்டர் ஓட்டம்.
என் கவிதைகளின் மூலம் தமிழுக்கு மேலும் வளம் சேர்த்திருப்பதாக நம்புகிறேன். வழக்கொழிந்து போன பல வார்த்தைகளை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறேன்.
என் கவிதைகளில் வரும் இறைவி யார் என்ற கேள்வி இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து எழ வாய்ப்பு இல்லை. நகுலனின் கவிதைகளிலும் நாவல்களிலும் வரும் சுசிலா என்ற பெண் திருவனந்தபுரத்தில் இருந்திருக்கலாம். ஆனால் நமக்கு அது ஒரு குறியீடு. படிமம். ஆழ்மனதின் பிம்பம்.
நகுலனின் புத்தகங்களைத் தேடி அப்படியே மேற்கோளாகக் கொடுப்பதற்கு நேரமில்லை. விருப்பமிருந்தால் நீங்கள் செய்யலாம். எனக்கு அந்தக் கவிதை ஒரு காட்சியாக நினைவில் தங்கியிருக்கிறது.
சுசீலா, நீ இரவில் மௌனமாக உட்கார்ந்திருக்கிறாய்,
வார்த்தைகள் உதிர்ந்து, நிழல்கள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.
உன்னைப் பார்க்கையில்,
வாழ்க்கையின் எல்லைகள் மறைந்து,
ஒரு பெரும் வெறுமை மட்டுமே தெரிகிறது.
இதற்கும் என்னுடைய மோகினிக்குட்டி, இறைவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் நாயகிக்கும் உள்ள ஒற்றுமையை நீங்கள் விளங்கிக் கொள்ளலாம். இதே காட்சிதான் என் கவிதைகளில் வேறு வேறு வார்த்தைகளில் வருவதை உணரலாம்.
இதேபோல் கலாப்ரியாவின் சசி. ஒரு காலகட்டத்தில் தமிழ் இலக்கியச் சூழலே சசி சசி என்று அலைந்து கொண்டிருந்தது. திருநெல்வேலியில் கலாப்ரியா வசித்த தெருவில் நிச்சயம் அந்த சசி இருந்திருக்கக் கூடும். பாரதியின் கண்ணம்மாவைத் தெரியாதவர் யாருமில்லை. தி. ஜானகிராமனின் யமுனா நிச்சயம் இருந்திருக்கத்தான் செய்வாள். அப்படித்தான் என் கவிதைகளின் இறைவி. கவிதையை நிறுத்தும் ஓர் எளிய வழி என்ற கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள். கவிதையை ஏன் நிறுத்த மாட்டேன் என்கிறாய் என்று கவிஞனிடம் கேட்கிறாள் இறைவி. இதுதான் மையம். எவ்வளவு சாதாரணமான கேள்வி. இது எப்படி அந்தச் சிறிய கவிதையில் ஒரு மேஜிக்காக மாறியிருக்கிறது பாருங்கள். இதுதான் சமகாலத் தமிழுக்கு நான் அளித்த கொடை.
இதைச் செய்யக் கூடியவர்கள் வெகுசிலர்தான். ஒருநாள் பாலு மகேந்திராவைப் பார்க்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அப்போது அவர் ஒரு மரத்தோடு பேசிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் ஹலோ சொல்லாமல் அந்த மரத்தின் அருகே சென்று அதன் இலைகளையும் மலர்களையும் கிளைகளையும் ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். பேசி முடித்து விட்டு என்னைப் பார்த்த பாலு கட்டியணைத்தபடி “முதல் முதலாக என்னைப் போலவே ஒரு மனிதனைப் பார்க்கிறேன்” என்றார்.
பூனை நாய்களோடு மட்டுமல்ல, எவனொருவன் மரங்களோடும் கல்லோடும் நதியோடும் நட்சத்திரங்களோடும் பேசுகிறானோ அவனே கவிஞன். அப்படிப்பட்ட மஹாகவி ஆதி சங்கரன். அவரிடமிருந்துதான் எல்லா பொருட்களுக்கும் உயிர் இருக்கிறது, அவற்றோடு பேச முடியும் என்பதைக் கற்றேன். அந்தப் பேச்சுதான் என் கவிதை யாவும். இதை ஒரே ஒரு மனிதர் தனக்கானது என்று நினைத்தால் அது தவறு. தனி அனுபவத்தை நான் பிரபஞ்ச கானமாக மாற்றுகிறேன். தனி மனுஷியை நான் பிரபஞ்சப் பேருருவின் ஒரு துளியாகக் கண்டு அந்தத் துளியைத் திரும்பவும் என் கவிதையின் மூலம் பிரபஞ்சத்தில் விகாசிக்கச் செய்கிறேன்.
அப்படிப்பட்ட கவிதைகளை நிறுத்திக் கொள்வதில் எனக்கு வருத்தமில்லை. பிரியமானவர்கள் இம்சையுறக் கூடாது. அவ்வளவுதான். எனக்கும் வேறு ஜோலிகள் எக்கச்சக்கமாக உண்டு. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இனி கட்டுரைகள் எழுத முடியாது. நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைத் தொகுதிகள் எழுதி விட்டேன். ஆகவே, இனிமேல் சாருஆன்லைன் காலியாகத்தான் இருக்கும். இந்தத் தளத்தை 60000 பேர் படிப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. தினமும் ஒரு ஐயாயிரம் பேர் வந்து பார்க்கிறார்கள். அவர்கள் இனிமேல் என்னுடைய பழைய கட்டுரைகளை, கதைகளைப் படித்துக்கொள்ள வேண்டியது.
சமீபத்தில் கார்ல் மார்க்ஸ் சொன்னார், கவிதை எழுதுவது சரி, ஆனால் இந்தக் கவிதைகளைத் தாண்டி சாருவின் இணையதளத்தில் அவர் வழக்கம்போல் எழுதும் கட்டுரைகளையும் குறிப்புகளையும் பார்க்க முடியவில்லை என்று பல நண்பர்கள் சங்கடப்படுவதாகக் குறிப்பிட்டார். எனக்கு வேறு வழி இல்லை. நாவல்களை முடித்தாக வேண்டும்.
சர்வதேச அளவில் பார்த்தால் யோசா போன்றவர்கள் இருபது இருபத்தைந்து நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். நானோ பத்தையே தாண்டவில்லை. ஆனால் அ-புனைவுகள் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை எழுதியிருக்கும் நிலையில் இனி நாவல்களில்தான் கவனம்.
ஒரு சின்ன லௌகீக சிக்கல் வரும். மாதம் நாற்பதாயிரம் சந்தா வருகிறது. அது நின்று போகும். கல்லுடைப்பவனின் தினக்கூலி மாதிரிதான் எனக்குக் கிடைப்பதும். ப்ளாகில் எதுவும் இல்லையானால் சந்தாவும் இல்லை. எழுதினால் கூலி. நியாயமான வாசகர்கள்.
எது பற்றியும் கவலைப்படாதவன் நான். பணம் என்பது என் சிந்தனையிலேயே இல்லை. இருந்தும் என் எழுத்து இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் சந்தா அனுப்பினால் அது உதவியாக இருக்கும். கல் உடைக்காமல் கூலி கேட்பதற்கு மன்னியுங்கள்.
என் இருப்பு, என் இயக்கம் பற்றி ஒரு சம்பவம் சொல்கிறேன். சுந்தர் சருக்கை, சீனி, நான், சுந்தரின் ஒரு நண்பர் நால்வரும் ஒரு பப்பில் அமர்ந்திருந்தோம். நண்பர் ஒரு கட்டிடக் கலை நிபுணர். அவரது ஆய்வுக் கட்டுரைகள் சர்வதேச இதழ்களில் வெளிவருகின்றன. கட்டிடக் கலை நிபுணரும் ஒரு எழுத்தாளனும் என்ன பேசிக்கொள்ள முடியும்? ஏ.ஆர். ரஹ்மானும் நானும் எட்டு மணி நேரம் என்ன பேசினோம்?
அயானிஸ் ஸெனாகிஸ் பற்றித் தெரியுமா என்று கேட்டேன். பெயர் கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார். ஏன் கேட்கிறீர்கள் என்றார். அதன் பிறகு நான் ஒரு மணி நேரம் அவரிடம் உரையாற்றினேன். இறைவி, அன்று நீ வராததால் அந்த உரையை நீ இழந்து விட்டாய். சுந்தரும் சீனியும் தத்துவம் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததால் அவர்களும் கேட்கவில்லை. (ஆனால் சீனி அதை வேறு பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறார்.) இப்போது நான் சொல்லப் போவதை நீங்கள் என்னுடைய கட்டுரைத் தொகுதி ஒன்றில் வாசிக்க முடியும். ஆனால் பேசும்போது கேட்பது போல் வராது. அந்தக் கட்டுரை ஆய்வுக் கட்டுரை போல் இருக்கும். புரியாது.
அயானிஸ் ஸெனாகிஸ் ஒரு கணித நிபுணர். கட்டிடக் கலை நிபுணர். இசையில் மேதை. அவர்தான் இசையில் ஒரு புதிய வகையைக் கண்டுபிடித்தார். அதன் பெயர் ஸ்டொக்காஸ்டிக் (Stochastic). நிச்சயமில்லாத, உறுதியற்ற (non-deterministic) மற்றும் Probabilitiesஐ அடிப்படையாகக் கொண்ட இசையே ஸ்டொக்காஸ்டிக் இசை. இந்த இசை வடிவத்தில், இசைக் கூறுகள் (எக்ஸ்ப்ரஷன்ஸ், தீவிரம், கால அளவு போன்றவை) முழுமையாக முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக, probability distributions மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்றன.
ஸெனாகிஸ் இந்த அணுகுமுறையை 1950களின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தினார், குறிப்பாக மெட்டாஸ்டாஸிஸ் (Metastaseis, 1953-54) மற்றும் பிதோப்ரக்டா (Pithoprakta, 1955-56) போன்ற படைப்புகளில்.
இவர் மரபான இசைக் கட்டமைப்புகளுக்கு எதிராக, இயற்கையில் காணப்படும் சிக்கலான மற்றும் உறுதியற்ற நிகழ்வுகளை இசையில் பிரதிபலிக்கச் செய்தார். உறுதியற்ற நிகழ்வுகள் என்றால் என்ன? மழைத்துளிகளில் ஏதாவது ஒழுங்கு இருக்கிறதா? ஆயிரம் பேர் கூடியிருக்கும் ரயில் நிலையத்தில் கேட்கும் ஒலிகளில் ஏதேனும் ஒழுங்கு அல்லது சீர்மை இருக்கிறதா?
இதற்கு ஸெனாகிஸ் கணினியையும் பயன்படுத்திக்கொண்டார். உதாரணமாக, அவர் உருவாக்கிய மார்க்கோவியன் ஸ்டொக்காஸ்டிக் இசை (Markovian Stochastic Music, 1958-59): இதில் ஒரு நிகழ்வின் probability முந்தைய நிகழ்வைப் பொறுத்தது, மார்க்கோவ் சங்கிலிகள் (Markov chains) பயன்படுத்தப்பட்டன (எ.கா., அனலோக் A).
பின்னர், 1970களில், ஸ்டொக்காஸ்டிக் ஒருங்கிணைப்பு (Stochastic Synthesis) என்று ஒரு புதிய முறையை உருவாக்கினார், இதில் ஒலி அலைவடிவங்களை (sound waveforms) நேரடியாக probability அடிப்படையில் உருவாக்கினார் (எ.கா., Gendy3, 1991).
இதையெல்லாம் வெறும் இசை என்று மட்டுமே புரிந்து கொள்ளாதீர்கள். இந்த இசை வடிவத்துக்கு அவருக்குக் கணிதமும் கட்டிடக் கலையும் பெரிதும் உதவின. அவரது இசையே வெறும் செவிகளுக்கானது மட்டுமல்ல. காணப்பட வேண்டியது. ஒரு பெரிய மைதானத்தில் எலக்ட்ரானிக் ஒலிக்கற்றைகளால் பல கட்டிட வடிவங்கள் உருவாகி உருவாகி மறைந்து புதிது புதிதாக புதிய கட்டிடங்கள் உருவாகி மறையும். நம்பவே முடியாத மந்திர உலகம் அது.
எண்பதுகளில் ஆரம்பத்தில் ஸெனாகிஸின் இசை நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறேன்.
ஸெனாகிஸ் சண்டிகரில் உள்ள அஸெம்ப்ளி ஹாலில் சில பகுதிகளை லெ கொர்பூஸியரோடு சேர்ந்து வடிவமைத்திருக்கிறார்.
இப்படி ஒரு கட்டிடக் கலை நிபுணரோடு கட்டிடக் கலைக்குத் தொடர்புடைய இசை பற்றி ஒரு மணி நேரம் உரையாடக் கூடிய ஒரு எழுத்தாளனை நீங்கள் இந்த உலகின் ஏதாவது ஒரு கோடியிலாவது காண முடியுமா? பக்கத்தில் வந்து உட்கார்ந்து இதைக் கேளுங்கள் என்றால் என்றால் எனக்கு இடுப்பு வலிக்கிறது, புடுக்கு வலிக்கிறது என்கிறீர்கள்?
சரி, ப்ராபபிலிட்டி தியரியால் எனக்கு என்ன பயன் என்று கேட்கிறீர்களா?
இதோ இதை கேளுங்கள். ஹென்றி ஷாரியர் ஃப்ரெஞ்ச் கயானாவில் உள்ள டெவில்ஸ் தீவில் போடப்படுகிறார். அங்கிருந்து அவர் எப்படித் தப்பினார்? ஸ்டொக்காஸ்டிக் ப்ராஸஸ் மூலமாகத்தான்.
இதேபோல் ப்ராபபிலிட்டி தியரி உங்கள் வாழ்க்கையையும் காப்பாற்றக்கூடும்.
ஹென்றி ஷாரியர் தப்பிக்கத் திட்டமிட்டார். அதற்கு அவர் ஒரு உயரமான பாறை மலையில் இருந்து கடலுக்குள் குதிக்க வேண்டும். ஆனால் அந்தக் கடல் பகுதியில் பாறைகள் சூழ்ந்திருந்தன. சாதாரண அலைகள் அவரை பாறையில் அடித்துக் கொன்றிருக்கும்.
அவர் அலைகளை நீண்ட நாட்கள் கவனித்தார். ப்ராபபிலிட்டி தியரியின்படி, கடல் அலைகளின் அளவு உறுதியற்றது (random), ஆனால் ஒரு pattern இருக்கிறது: சராசரியாக, ஒவ்வொரு ஏழாவது அலையில் வாய்ப்பு அதிகம். இது ‘wave grouping’ என்ற stochastic phenomenon. அவர் இந்த probability of a big wave at every seventh one என்பதை கவனித்து விட்டு, ஏழாவது அலையில் குதித்தார். அது அவரை பாறைகளைத் தாண்டி கொண்டு சென்றது, அவர் தப்பினார்.
இதனால், ப்ராபபிலிட்டி தியரி risk assessment, decision-making, மற்றும் உயிர் பிழைப்பில் உதவுகிறது—உதாரணமாக, gambling, insurance, weather forecasting, அல்லது stock market-இல்.
கடல் அலைகள் deterministic ஆக (உறுதியானதாக) இல்லை; அவை wind, tides போன்ற காரணிகளால் உறுதியற்றவையாகின்றன. ப்ராபபிலிட்டி மாடல்கள் (e.g., Poisson distribution அல்லது Markov chains) அலைகளின் அளவை கணிக்க உதவுகின்றன. “Every seventh wave is big” என்பது ஒரு approximation—உண்மையில், பெரிய அலைகளின் probability சில சுழற்சிகளில் அதிகம் (wave groups). ஷாரியர் empirical observation மூலம் இதைக் கண்டார், ஆனால் ப்ராபபிலிட்டி தியரி இதை mathematically model செய்ய உதவும்.
இங்கே risk calculation-ஐயும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழாவது அலையில் குதிப்பதன் வெற்றி வாய்ப்பு (success probability) அதிகம் என்று கணித்து முடிவு எடுத்தார் ஷாரியர். நிஜ வாழ்க்கையில், இது மருந்து (drug trials), engineering (failure rates), அல்லது தினசரி வாழ்க்கை (traffic accidents prediction) இல் பயன்படும்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்தப் ப்ராபபிலிட்டி தியரி பங்குச் சந்தையில் பெரிதும் உதவியிருக்கிறது.
காலத்தில் சந்திப்போம்.
சந்தா/நன்கொடை அனுப்ப முடிந்தவர்களுக்கு விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai