பெண்களே
நான் ஆண்
ஆனால்
உங்களுக்கான ஒரு கெரில்லாப் போராளி
அந்த வகையில்
உங்களுக்கோர் ஆலோசனை
எனிதிங் ஃபார் யூ
சொல்லாதீர்கள்
அது வெறும் சொல்
அர்த்தமற்ற சொல்
அனுபவத்தில் சொல்கிறேன்
எழுபது வயதில் முதல் முத்தம்
அதற்கு முன்?
பெண்கள் வந்தார்கள் சென்றார்கள்
ஒவ்வொருத்தியும் சொன்னாள்
எனிதிங் ஃபார் யூ
சொன்னபடி செய்தார்கள்
உயிரையும் கொடுப்பார்கள்
ஆனால் முத்தம்?
அவர்களின் பட்டியலில் இல்லை
எனக்கோர் கனவு இருந்தது
பாரிஸின் சென் நதிக்கரையில்
என் காதலியோடு முத்தத்தில்
மூழ்க வேண்டும்
கனவுக்குக் காரணம்
ரேப் கேபிட்டல் ஆஃப் தெ வேர்ல்ட்
தில்லி
என்பது போல்
பாரிஸ் இவ்வுலகின்
முத்தத்தின் தலைநகரம்
அப்போது ஒரு காதலி இருந்தாள்
எனிதிங் ஃபார் யூ
ஆனால் முத்தம் தடை
அவளும் நானும் பாரிஸ் சென்றோம்
அது ஒன்றும் அத்தனை எளிதல்ல
பதிவாளர் தரும் மணச்சான்றிதழ்
இருந்தால் அது ஒரு பொருட்டே இல்லை
நம் காதலெல்லாம் நிறுவனம் சாராதவை
ஏற்கனவே அவளிடம்
என் கனவைச் சொன்னேன்
சம்மதித்தாள்
’ஒரே முறைதான்’
’சரி’
பாரிஸ்
சென் நதிக்கரை
வசந்தம் முடிந்து குளிரின் தொடக்கம்
மாலை நேரம்
முத்தமிட முயன்றேன்
தடுத்து விட்டாள்
காரணம் கேட்கவில்லை
ப்ரேக் அப் ஆன பின்
நல்ல நண்பர்கள்
ஆண்டு பல கழிந்து கேட்டேன்
‘சற்று முன்னால்தான்
நீ சிக்கன் சாப்பிட்டிருந்தாய்’ என்றாள்
இன்னொருத்தி
எனிதிங் ஃபார் யூ
திடீரென உடலுறவுக்குத் தடை
காரணம்?
சொல்ல மாட்டேன்
பத்தாண்டுகள் கடந்து சொன்னாள்
அப்போது எல்லாம் தாண்டி விட்டது
எனிதிங் ஃபார் யூ
காலாவதியாகி விட்டது
ரீல்ஸில் பார்க்கிறேன்
யோனி தெரியும் ஆடைகள்
வேசிகள் அல்ல
சாதாரண பெண்கள்
காதலனுக்காகக் கணவனைக்
கொல்லும் பெண்கள்
ஒன் நைட் ஸ்டாண்ட்
நான்கைந்து பாய் ஃப்ரெண்ட்ஸ்
எல்லோருமே எனிதிங் ஃபார் யூ
அதெல்லாம் இப்போது ஆண்களின்
அகராதியில் வந்து விட்டது
குடிக்காதே
குடியை நிறுத்துகிறான்
புகைக்காதே
புகையைத் துறக்கிறான்
பெற்றோரைப் பார்க்காதே
உடனடியாய் ஒதுக்குகிறான்
குழந்தை வேண்டாம்
வேண்டாம்
வேண்டும்
வேண்டும்
அலுவலகம் முடிந்ததும் வீடு
இதோ
நேற்று நடந்தது
நண்பன் ரவி
அவன் குடியிருப்பின் கீழொரு பூனை
அணிலையோ எதையோ
பிடிக்க முயன்று உயரமான கட்டிடத்தில்
மாட்டிக் கொண்டது
இரண்டு நாட்கள் காணவில்லை
மூன்றாம் நாள் கண்டு பிடித்தான்
அதற்குக் கீழே வரத் தெரியவில்லை
மழைக்காலம்
நீர்ச்சத்துக்குறைவு ஏற்படாது
உணவை மேலே எறிகிறான்
ரெஸ்க்யூ டீம் வர ஒரு நாள்
ஃபோனில் பேசினேன்
பதற்றமாக இருந்தான்
என் மனையாள்
யாரிடம் பேசினாய்
என்ன பேசினாய் என
பிரதமரைக் கொன்ற குற்றவாளிகளை
விசாரிக்கும் காவலர் போல் கேள்வி கேட்டாள்
ரவியைப் பிடிக்காது
அவனுக்கு ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விட்டேன்
அவன் வயது முப்பத்து மூன்று
இதுவரை யாரும் அவனுக்குப்
பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதில்லை
அதனால் சொன்னேன்
அதிலிருந்துதான் மனையாளுக்கு
ரவியைப் பிடிக்காமல் போனது
என் மனையாளுமே
தினமும் சொல்கிறாள்
எனிதிங் ஃபார் யூ
ஒரு நண்பன்
மனைவியின்
வங்கிக் கணக்கு எண்
ஊதியம், கைபேசியின் பாஸ்வேர்ட்
எதுவும் தெரியாது
அந்தரங்கத்தில் குறுக்கிடாதே என்கிறாள்
அவளும்
எனிதிங் ஃபார் யூ
பெண்களே
அந்த வார்த்தை
அடிமைகளின் சங்கிலி
தூக்கி எறியுங்கள்
இப்போது உங்கள் வார்த்தை
‘ஃபக் யூ…’