அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்
அவள் நிழல் ஒளியில் நடனமாடியது
என் முதல் வாசகி
வார்த்தைகளைத் தொட்டு உயிரூட்டியவள்
இப்போது கடைசி வாசகி
என் எழுத்துகளை மௌனமாகப் புரட்டுபவள்
காலம் காற்றில் மணலைச் சிதறவிடுகிறது
எந்தக் கரத்தால் அதைப் பிடிக்க முடியும்?
அவளது சிரிப்பு ஒரு தொலைந்த பாடல்
நிலவின் கீறலில் மங்குகிறது
வலி மட்டுமே மிஞ்சுகிறது
கற்களில் செதுக்கப்பட்ட கவிதை போல…
புரியாது
ஆனால் தவிர்க்க முடியாது
அவள் இல்லாத இந்த இரவில்
கவிதையை அனுப்பி வைத்து
அவள் வார்த்தைக்காகக் காத்திருக்கிறேன்
படித்தாளா? இல்லையா?
என் வார்த்தைகள் வெறுமையில் தொங்குகின்றன
நிலவும் நானுமாக
மௌனத்தில் ஆழ்ந்திருக்கிறோம்
அவளது புன்னகை ஒரு நிழலாக
நிலவொளியில் தோன்றித் தோன்றி
மறைகிறது