1
என் எழுத்தையும்
என் வாழ்வையும்
கொஞ்சமாய் அறிந்த தோழி
சொன்னாள்
’உங்கள் எழுத்தை விட
உங்கள் வாழ்க்கை
சாகசமாகவும்
நம்ப முடியாததாகவும்
இருக்கிறது’
இல்லத்தில் இருக்கும்போது
வெறும் வேட்டிதான்
உள்ளாடை இல்லை
சட்டையும் இல்லை
ஒருநாள் திடீரென
மனையாள் கேட்டாள்:
’உன் முதுகில் பல் தடம்
எப்படி வந்தது?’
லூஃபாவினால்
வந்திருக்கும் என்றேன்
இல்லை, பல் தடம்தான்
என அடித்துச் சொன்னாள்
வேட்டியை அவிழ்த்துப் போட்டு
நிர்வாணமானேன்
கோபத்துடன் சொன்னேன்
’ஆண்குறியைத் தேடிக்
கண்டுபிடி
சிறுநீர் கழிக்கவே அதைத்
தேடிக் கண்டுபிடிக்க
சிரமப்படுகிறேன்’
என் இல்லமே ஒரு கண்ணாடி வீடு
கர மைதுனம்
செய்வதற்குக் கூட கழிப்பறைதான்
செல்ல வேண்டும்
நீ பைத்தியம் என்றபடி
வேட்டியை எடுத்து என் மீது
போர்த்தி விட்டு அகன்றாள்
மனையாள்
பல் தடம் பார்த்ததிலிருந்து
என் தொலைபேசியையே
பார்க்க ஆரம்பித்தாள்
என் தொலைபேசியில்
ஒரு எழவும் இருக்காது
அதனால் நானும்
கவலையின்றி இருந்தேன்
லூஃபாவினால் வந்த வினை
என் வாழ்நாள் கனவை
அடுத்த பிறவிக்கு ஒத்தி வைக்க
வேண்டியிருந்தது
பொறுங்கள், இன்னொரு விஷயம்
நான் சில காலம் catamiteஆக
இருந்த போது ஒருத்தன்
முதுகில் நகத்தால் பிறாண்டி
பற்களால் கடித்திருக்கிறான்
மாதக்கணக்கில் வலிக்கும்
எரியும்
நிறைய பணம் கொடுப்பான்
பட்டினியின் காரணமாய்
உடலை விற்று வாழ்ந்த காலம்
அதில் என்ன இன்பம்?
நூறு பேருக்கு முன்னால்
லைவ் ஷோவில் கலவி செய்பவரைப் போல
செக்ஸ் அங்கே செக்கிழுக்கும் செயல்பாடு
2
ஐம்பத்தைந்து ஆண்டுகளாய்
முத்தத்துக்கு அலைந்து
எழுபதில் கிடைத்த
கதையை அதிகமாய் எழுதி விட்டேன்
அதேபோல்
இன்னொரு ஆசை இருந்தது
உடம்பெல்லாம் பல்தடமும்
நகத்தடமும் வாங்க வேண்டும்
பெண்களுக்கு
அந்த ஆசை உண்டென்று அறிவேன்
ஆண் உருவில் இருந்தாலும்
எனக்குப் பெண்ணுணர்வுகள் சில உண்டு
அதில் இதுவும் ஒன்று
முத்தமே கிடைக்காதபோது
பல்தடம் நகத்தடத்துக்கெல்லாம்
எங்கே போவேன்?
ஒரு தோழியிடம் கேட்டேன்
ஸைக்கியாட்ரிஸ்டிடம்
போகச் சொன்னாள்
பல்தடம் நகத்தடம் வாங்க அல்ல
எனக்கிருப்பது ஏதோ ஒரு மனநோயாம்
இப்போது லூஃபாவினால்
என் கனவுக்கு வந்தது கேடு
என் இறைவி
எனிதிங் ஃபார் யூ
என அடிக்கடி சொல்வதால்
அவளிடம் கேட்டுப் பார்க்கலாம்
என நப்பாசை கொண்டிருந்தேன்
இனி முடியாது
லூஃபாவின் நுரையில்
என் ஆசை மூழ்கியது
அடுத்த பிறவி வரை
காத்திருக்க வேண்டியதுதான்