நேர்மையில்லாதவன்

சாரு,
தன்னுடைய படைப்புகள் அவற்றின் தரம் சார்ந்தே பேசப்பட, விமர்சிக்கப் பட வேண்டுமென்பது பல கலைப் படைப்பாகளின் கருத்து. படைப்பாளியின் தனி வாழ்வை அல்லது சொந்த விஷயங்கள் சார்ந்த அறிவு எதுவும் படைப்புகளை நிர்ணயிக்க வேண்டியதில்லை என்பது அதன் சாரம். உதாரணமாக, நீங்கள் கொண்டாடும் சுஜாதா மற்றும் christopher nolan ஆகியோரின் கருத்து அவ்வகையே. அவ்வளவு ஏன், சமீபமாக உங்களின் உடன் பிறவா சகோதரனான ஜெமோ அவர் எழுத்தாளர் என்பது அவருடன் பணியாற்றும் பெரும்பாலோருக்குத் தெரியாது என்று கூறி வருவதை நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் ஜீரோ டிகிரி, ராசலீலா, தேகம், எக்சைல் அனைத்தையும் படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன்; பின்நவீனத்துவம் என்ற பெயரில் உதயா என்ற கதாபாத்திரம்  யாரைக் குறிக்கிறது என்பதெல்லாம் தெளிவே. ஆக, உங்களின் பிம்பத்தை முன்னிறுத்தியே புனைவுகளைத் தருகிறீர்கள். அதுவும் சரியே. சற்றேனும் நேர்மை என்று ஒன்று வேண்டாமா? நீங்கள் கூறியதை நம்பி என் நண்பர்களோடு பேசும் சமயத்தில், 1500 பேர் புதிய எக்சைல் வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள் என்ற என் கருத்தை எளிதில் மறுத்து ஒரு புகைப்படத்தைக் காட்டினர். நிஜ உலக நடப்புகளை புனைவாக வடிக்கும் (அல்லது வடிப்பதாக நம்பும்) நீங்கள் நிஜ உலகிலேயே நேர்மையற்ற ஒருவராக இருக்கும் போது எப்படி நேர்மையாக ஒரு புனைவை அமைக்க இயலும்? 1500 பேர் வந்திருந்தார்கள் என்று கூசாமல் எழுதி விட்டு, ஸ்ரீ வில்லி புத்தூர் பற்றி எழுத ஆரம்பித்தால் ஆண்டாளும் ராமானுஜனும் கை கூடி விடுவார்கள் என்று நினைக்கிறீர்கள் போலும். ஆன்மிகம் பற்றி நீங்கள் பேசலாம், அதைப் படிக்காமல் இருக்க என் பெருமாள்
எனக்கு ஆசிர்வதிப்பானாக.
மிஷ்கினினுடனான நட்பு, நித்யானந்தா பிரச்சனை, ஜெயமோகனுடன் உள்ள உறவு, கையெழுத்துக்கு காசு…என்று எந்த நிலையிலும் உங்களால் உண்மை அல்லது ஒரு நிலைப்பாடு என்பதையே சொல்ல இயலவில்லையே, ஏன்? என்னுடைய இப்போதைய நிலைப்பாடு இதுதான். உங்களால் இனி தனியொரு தரமான இலக்கியப் படைப்பைத் தர இயலாது என்றே நினைக்கிறேன். இது வரை தந்திருக்கிறீர்களா என்பதைத் தமிழ் சமூகம் ஏற்கனவே கோடிட்டுக் காண்பித்து விட்டதென்றே நினைக்கிறேன். ஒரு வகையில் ஒரு பிம்பம் உடைந்தது நன்றே.
“சாருவைப் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம், ஆனால் மறுக்க முடியாது” என்று உங்கள் புத்தகங்களின் பின்னட்டைகள் அறைகூவத் தயங்குவதில்லை. வாழ்விலும், அதனை சுற்றிக் கட்டப் படும் உங்கள் புனைவிலும் எந்த நேர்மையும் இல்லாத போது, துரதிர்ஷ்டவசமாக நான் முன் பதிவு செய்த “புதிய எக்சைல்” நான் பிரிக்கப் போவதில்லை, படிக்கவும் போவதில்லை. முற்றிலுமே உங்களை மறுத்து, மறக்க முடியும். முதல் வரியில் கூறியது போல நீங்கள் எதையும் படைத்ததில்லை என்பதாலும், ஒரு படைப்பாளியின் நேர்மையை நீங்கள் என்றும் அணுகமுடியாது என்பதாலும். சீரோ டிகிரிக்கும், ராசலீலாவுக்கும், தேகத்துக்கும், எக்சைலுக்கும் பல திருத்தங்கள் நீங்கள் படைக்க வேண்டுகிறேன்.
உண்மையிலேயே நீங்கள் ஒரு கலைபடைப்பைத் தந்தால் இந்த மின்னஞ்சலில் தெரிவிக்கவும். நேர்மை என்று ஒன்று மட்டும் இருந்தால் போதும்.
வாழ்த்துக்கள்,
உங்களைப் படிப்பதை நிறுத்தும் உங்கள் முன்னாள் வாசகன்.
***
முன்னாள் வாசகருக்கு,
உங்கள் கடிதத்தின் மேலே டாக்டர் சிவ பாஸ்கரன் என்று இருந்தது.  எனக்கு கூதி மவனே, புண்ட மவனே என்று பல அன்புக் கடிதங்கள் தினமும் வருகின்றன.  நீங்கள் டாக்டர் என்பதால் அப்படி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் நல்ல வார்த்தைகளால் என்னைத் திட்டியிருக்கிறீர்கள்.  உங்கள் கடிதம் படித்ததும் எனக்கு வியர்த்து ஊற்றி கொஞ்சம் நெஞ்சும் குஞ்சும் வலித்தது.  குற்றம் உள்ள குஞ்சு குறுகுறுக்கிறது.  நல்லவனாக இருந்தால் உங்கள் கடிதத்தைக் குப்பைத் தொட்டையில் போட்டு விட்டுத் தன் ஜோலி cunt ஐப் பார்க்கப் போயிருப்பான்.  நான் கெட்டவன்.  நேர்மையற்றவன்.  எனவே தான் உங்கள் கடிதத்துக்கு மதிப்புக் கொடுத்து எழுதுகிறேன்.  உங்கள் முதல் பத்தியும் கடைசி வரியும் ஒன்றுக்கு ஒன்று கடுமையாக முரண்படுகின்றனவே, கவனித்தீர்களா?  முதல் பத்தியில் சுஜாதாவையும் க்றிஸ்டோபர் பூலனையும் மேற்கோள் காட்டி நேர்மை என்பது தேவையற்றது, கலையே முக்கியம் என்கிறீர்கள்.  கடைசி வரியில் நேர்மை மட்டுமே தேவை என்கிறீர்கள்.  நேர்மை dick ஐ மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றையும் ஆட்ட முடியாது.  வில்லியம் பர்ரோஸ் என்ற asshole சிறுவர்களைப் புணரும் பழக்கம் உள்ளவன்.  அமெரிக்காவில் அது கடும் குற்றம் என்பதால் மொராக்கோ வந்து சிறுவர்களைப் புணர்ந்து கொண்டிருந்தான்.  மொராக்கோவில் அமெரிக்க டூரிஸ்டுகளை அவ்வளவாகக் கண்டு கொள்ள மாட்டார்கள்.  எனவே சிறுவர்களைப் புணர்பவர்கள் இலக்கியம் படைக்க முடியாது என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் பல இலக்கியவாதிகள் பலவிதமான அயோக்கியத்தனங்கள் செய்து கொண்டு இலக்கிய dick ஐயும் ஆட்டிக் கொண்டிருப்பதால் இலக்கிய dick ஐ ஆட்ட நேர்மை cunt தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து அயோக்கியனாகி விட்டேன்.
என்னைப் போன்ற ஒரு கயவாளி dick-ஐ நீங்கள் படிப்பதை நிறுத்தியது உங்கள் வாழ்க்கையின் மகத்தான் முடிவு ஆகும்.  காமராஜ் அரங்கில் வந்தவர் எண்ணிக்கை 1500 என்பது என்னுடைய பொய்களில் ஒன்று.  150 என்பதுதான் உண்மை.  இந்த உண்மையை உலகுக்கு அறிவித்து விடுங்கள்.  ஆனால் அராத்து என்று ஒரு asshole எனக்கு நண்பனாக இருக்கிறான்.  அவனுடைய புத்தக வெளியீட்டு விழாவில் சுமார் 1000 பேர் வந்திருந்தனர்.  அதை எந்த இலக்கிய asshole உம் கண்டு கொள்ளவே இல்லையே, அது ஏன் டாக்டர் ?
சாரு நிவேதிதா என்ற கூ.ம.