மெர்சல்

மார்ஜினல் மேன் நாவலை ராப்பகலாக உட்கார்ந்து எடிட் செய்து கொண்டிருப்பதால் மெர்சல் படத்துக்கான விமர்சனம் எழுத முடியவில்லை. நம்ம வேலையைப் பார்ப்போம் என்ற மனநிலை. இந்தப் படத்தை விமர்சித்து எழுதி – அதை எழுத ரெண்டு மணி நேரம் ஆகும் – கண்டவனும் உன் வீடு தேடி வந்து உதைப்பேன் என்று மிரட்டி மெயில் போட… இந்தக் கருமம் எல்லாம் எதற்கு என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் நியூஸ் 18-இலிருந்து ஒரு போன். மெர்சல் பற்றியும் அதில் விஜய் அரசியலுக்கு வரப் போவது பற்றி நேரடியாகச் சொல்லியிருப்பது பற்றியும் பேசுகிறீர்களா எனக் கேட்டார்கள். அஞ்சு நிமிஷ வேலை. பதினைந்து நிமிடம் பேசியிருக்கிறேன். கிழிகிழி என்று கிழித்து எறிந்து விட்டேன். படத்தை அல்ல. படம் செம மசாலா படம். இடைவேளை வரை செம வேகம். துளிக்கூட சலிப்பாக இல்லை. இடைவேளைக்குப் பிறகு ஒரு மணி நேரம் தூங்க வைக்கிறார்கள். ஆனாலும் படத்தை ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம். ஆனால் பிரச்சினை அது அல்ல. விஜய் பேசும் அரசியல். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்தப் படம் இதே வசனங்களோடு வெளியில் வந்திருக்காது. 30 கோடி சம்பளம் போதவில்லை. முதல்மந்திரி நாற்காலியும் தேவைப்படுகிறது ஹீரோ நடிகர்களுக்கு.
இந்த அளவுக்குக் கிழித்து என் வாழ்நாளில் பேசியதில்லை. மாலையில் நியூஸ் 18-இல் வரும்.