தலைக்கு மேல் வேலை. இப்போதுதான் வங்கிக்குப் போய் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி வந்தேன். பொலிவியாவில் On arrival வீசா என்பதால் அங்கே கேட்பார்கள். அதில் ஒரு ‘இக்கு’ இருக்கிறது. ஜூன் மாதத்துக்கான ஸ்டேட்மெண்ட்டும் சேர்ந்தால் வீசா மறுக்கப்பட்டு விடலாம். பயணத்துக்கே ஏழெட்டு லகரத்தை செலவழித்து விட்டதால் அப்புறம் சேமிப்பில் என்ன இருக்கும்? வெறும் பூஜ்யங்களைக் காண்பிக்க முடியாது. அதனால் பயண முகவருக்கு ஏழெட்டு லகரங்களை அனுப்புவதற்கு முன்பாக நம்மிடம் இருந்த பேலன்ஸை வைத்து ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும். இதை எனக்குச் சொல்லிக் கொடுத்தது கூட பயணத்தில் என் கூட வரும் நண்பர்தான். ரவி ஷங்கர். முன்பின் பார்த்ததில்லை. சீலே, பெரூ எல்லாம் போய்க் கொள்ளலாம்; ஆனால் உங்களோடு போக முடியாது அல்லவா? அந்த ஒரு காரணத்துக்காகவே வருகிறேன் என்று சொல்லி, படு சிரமமான தடைகளையெல்லாம் மீறி என்னோடு வருகிறார்.
இன்னும் ஒரு விஷயம்தான் செய்ய வேண்டும். தெர்மல்ஸ் எடுக்க வேண்டும். சென்ற வாரம் ராஜேஷ் சந்தரோடு எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்ற போது ஒரு ஆடம்பரமான கடையில் ஒரு மேட்டுக்குடிப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை ஒரு கஸ்டமர் என்று நினைத்தபடி தாண்டிச் சென்ற போது என்ன வேண்டும் என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டதும் ஒருக்கணம் அதிர்ந்து போய் தெர்மல் என்று சொல்லி விட்டேன். தெர்மல் என்றால் அவளுக்குத் தெரியவில்லை. முழித்தாள். புரிந்து விட்டது. சுதாரித்துக் கொண்ட நான் அமெரிக்க உச்சரிப்பில் – நுனிநாக்கை மேல் பற்களின் பின்புறம் நன்கு அழுத்தி ‘ர்’ ஒலி கொஞ்சம் கூட வாயிலிருந்து வெளியே வந்து விடாமல் பதுக்கி, ‘மல்’லை மட்டும் வெளியிட்டு த்தெ(ர்)மல்ஸ் என்றேன். சட்டென்று புரிந்து கொண்டு “ஓ, தே(ர்)மல்ஸ்? வீ ட்தோந் ஹாவ்” என்றாள். இப்படிப்பட்ட ஹாலிவுட் ரேஞ்ச் பெண்களெல்லாமா நம்மூர்க் கடைகளில் விற்பனையாளர்களாக இருக்கிறார்கள் என்று கேட்டேன் ராஜேஷிடம். கல்லூரி மாணவிகள் பாக்கெட் மணிக்காக வேலை செய்வார்கள் என்றார் அவர்.
பின்னர் எக்ஸ்பிரஸ் அவென்யூவிலேயே ஜாக்கி ஷோ ரூமில் தெர்மல்ஸ் இருப்பதைக் கண்டு பிடித்தோம். ராஜேஷுக்கு ரொம்ப செலவு வைக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் வெறும் மேலுக்கு மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பி விட்டேன். ஆனால் பிறகுதான் தெரிந்தது, பாட்டமும் ரொம்ப அவசியம் என்று. அதற்கப்புறம் ஒருநாள் ராஜேஷும் நானும் அதே எக்ஸ்பிரஸ் அவென்யூ ஜாக்கி ஷோ ரூமுக்குப் போனோம். தெர்மல்ஸ் பாட்டம் இல்லை. இந்தக் கொளுத்தும் வெயிலில் எவன் தெர்மல்ஸ் போடுவான்? அதற்கு மேல் ராஜேஷுக்கும் நேரமில்லை; எனக்கும் நேரமில்லை. பிறகு கடைசி கடைசியாக முந்தாநாள் (இந்த சின்ன குறிப்பை ரெண்டு மூணு நாளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; எனவே முந்தாநாள் என்பதை 24-ஆம் தேதி என்றே கொள்க) தெர்மல்ஸ் வாங்கப் போகலாம் என்று முடிவாயிற்று. வேளச்சேரியில் இரவு எட்டு மணிக்குக் கிளம்பிய ராஜேஷ் போக்குவரத்து நெருக்கடிகளைத் தாண்டி மயிலாப்பூர் வந்து சேர ஒன்பது ஆனது. பல கடைகளுக்கும் போய் அலைந்தோம். எங்கேயும் தெர்மல்ஸ் கிடைக்கவில்லை; பல கடைகளை மூடிக் கொண்டிருந்தார்கள். பத்து மணி வரை சுற்றினோம். கிடைக்கவில்லை. அன்னிக்கே வாங்கியிருக்கலாம் சார் என்றார் ராஜேஷ். ஆமாங்க என்று அசடு வழிந்தேன். அப்புறமாக அமராவதி போய் இட்லியும் நாட்டுக் கோழிக் குழம்பும் கேட்டேன். எனக்கு மட்டும்தான். ராஜேஷ் இத்தனை சீக்கிரம் வேண்டாம் என்று சொல்லி விட்டார். நாட்டுக் கோழி இல்லை. மீன் குழம்பு இருக்கிறது என்றார்கள். வந்தது. நல்ல ருசி. இட்லிதான் காலையில் போட்டது போல் இருந்தது.
இன்றைய தினம் பயணத்துக்கு மூட்டை கட்டும் நேரத்தில் தெர்மல்ஸ் இல்லாமலே போய் விடலாம் என்று முடிவு கட்டின தருணம் வீட்டுக்கு ராஜேஷ் வந்தார். இரண்டு அளவுகளில் அவர் வாங்கிய தெர்மல்ஸைக் கொடுத்தார். இரண்டு அளவுகளுமே சரியாக இருந்தன.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai