அமெரிக்கப் பயணம் – சில முன்குறிப்புகள் (5)

இதற்கு முன்னால் எழுதிய நான்கு குறிப்புகளையும் ஒரு ஓட்டமாகப் படித்துக் கொண்டு இதைத் தொடரலாம்.  நியூஜெர்ஸியில் வசிக்கும் – மணி என்று நான் அன்புடன் அழைக்கும் மணிசேகரனோடு பேசிக் கொண்டிருக்கும் போது என் பயணங்களின் தன்மை பற்றி விளக்கினேன்.  உதாரணமாக, பாரிஸ் போனால் அந்நகரின் பிரபலமான ஈஃபிள் டவரைப் பார்க்க எனக்கு விருப்பம் இருக்காது.  அதை விட அந்நகரில் உள்ள catacombs-ஐப் பார்க்க விருப்பப்பட்டு அங்கே போனேன். 

பொதுவாக நினைவுச் சின்னங்களைப் பார்ப்பதில் எனக்கு விருப்பம் இல்லை.  எனக்கு லிங்கன் பிடிக்கும்.  மனித குல வரலாற்றில் லிங்கனைப் போன்ற ஒரு ஒரிஜினல் சிந்தனையாளரைப் பார்ப்பது கடினம்.  ஆனால் அவரது நினைவிடம் அமைந்திருக்கும் கெட்டிஸ்பர்கைப் பார்ப்பதில் அத்தனை ஆர்வப்பட மாட்டேன்.  அங்கேதான் 1863-இல் லிங்கன் ஆற்றிய உலகப் புகழ் பெற்ற உரை நிகழ்த்திய இடம் உள்ளது.  ஆனால் அதை விட நியூயார்க் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஹார்லமைப் பார்க்க விரும்புவேன்.  34th Street Herald Square station-ஐப் பார்க்க விரும்புவேன்.  அங்கேதான் சப்வே பாடகராக இருந்து இன்று John the Martyr ராக் குழுவில் பாடகர் ஆகி விட்ட பில் ஹட்ஸன் பாடிக் கொண்டிருந்தார்.  மற்றும் அவசியம் சில்வியா’ஸ் ரெஸ்டாரண்ட் போக வேண்டும்.  ஹார்லம் முன்பு இருந்ததைப் போல் அத்தனை ஆபத்தான இடம் இல்லை என்கிறார்கள்.  இரவில் ஹார்லமில் உள்ள பார்க்குகளுக்குப் போகக் கூடாதாம்.  (அங்கே ஏன் போகிறோம்?)  பாரிஸ் ப்ளூஸ் போக வேண்டும். அசைவ உணவுக்காரர்களோடு ஹார்லம் பப்ளிக் (அங்கே சிக்கன் விங்ஸ் நன்றாக இருக்குமாம்; எனக்கு ரொம்பப் பிடித்த ஐட்டம்) எல்லாம் லிஸ்டில் இருக்கிறது. 

ஆனால் அக்டோபர் என்பதை ஏப்ரலுக்கு ஒத்திப் போட்டு விட்டேன்.  இரண்டு காரணங்கள்.  இந்த முறையாவது கடும் குளிரில் பயணம் வேண்டாம்.  இரண்டாவது காரணம், வங்கிக் கணக்கில் பணம் சேர்க்க வேண்டும்.  இல்லாவிட்டால் மூன்றாவது முறையாக வீஸா மறுத்து விடுவார்கள்.  இரண்டு முறையும் மறுக்கப்பட்டது இந்தக் காரணத்தால்தான்.  வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லை. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai