வணக்கம் சாரு அவர்களே,
நான் தற்பொழுது தங்களுடைய வரம்பு மீறிய பிரதிகள் என்ற கட்டுரை தொகுப்பினை வாசித்து வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது,அதில் தாங்கள் நிறைய எழுத்தாளர்கள் குறிப்பாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கைளை குறிப்பிட்டுள்ளீர்கள் அதை படித்த பிறகு எனக்கும் அவர்களை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது யாரிடமிருந்து தொடங்கலாம் என்பதை தாங்கள் எனக்கு சற்று ஆலோசனை கூற முடியுமா.
இப்படிக்கு
ப. லட்சுமி நாராயணன்.
தாராளமாகச் சொல்லலாம். விரிவாகவே பேசலாம். ஆனால் அதற்கு நீங்கள் எனக்குக் கட்டணம் தர வேண்டும். ஆன்மீக குருமார்கள் எவ்வளவு வசூலிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். எனக்கான கட்டணத்தையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
என் முடிவைத்தான் என் இணைய தளத்தில் ஏற்கனவே அறிவித்திருக்கிறேனே? சில தினங்களுக்கு முன் IndiaGlitz என்ற நிறுவனத்திலிருந்து பேட்டி கேட்டார்கள். பிக் பாஸ் 3 பற்றி. வீட்டுக்கு வந்துதான் எடுத்தார்கள். ஆனால் எனக்கு அரை நாள் செலவாயிற்று. ஆனால் எல்லாம் ஓசி. பணம் எதுவும் கொடுக்கவில்லை. இனிமேல் கேட்டால் கொடுக்க மாட்டேன்.
இனிமேல் இலவச சேவை கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். பல தனவந்தர்கள் என் வீடு தேடி வந்து என் புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு போகிறார்கள். அவர்களோடு பேசுவதற்காகக் குறைந்த பட்சம் ஒருமணி நேரம் செலவாகிறது. ஆனால் அந்த ஒருமணி நேரமும் இலவச சேவைதான். என்ன வேலை செய்கிறீர்கள் என்று ஒருவரைக் கேட்டேன். வீடு கட்டுமானத் தொழில் செய்வதாகச் சொன்னார். பெயர் என்ன என்று கேட்டால் சென்னையிலேயே ஒரு பிரபலமான நிறுவனத்தின் முதலாளி அவர். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். என்னுடைய ஒரு மணி நேரத்தை நான் உங்களுக்கு ஏன் இலவசமாகத் தர வேண்டும்? ஒரு மருத்துவரைப் பார்க்க மூன்று மணி நேரம் காத்திருக்கிறீர்கள். கட்டணம் ரெண்டாயிரம் ஆகிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்; நாடி பிடித்துப் பார்க்க 800 ரூபாய் வாங்கும் ஒரு டாக்டர் என் பக்கத்துத் தெருவில் இருக்கிறார். அப்படியும் அவரிடம் கூட்டம் அள்ளுகிறது. ஆனால் எழுத்தாளனை மட்டும் ஓசியில் பார்க்கலாம். என்ன நியாயம் ஐயா இது? அப்படித்தான் ஒருவர் என் புத்தகங்களையெல்லாம் தூக்கிக் கொண்டு என் வீட்டுக்கு வந்தார். ஒரு பெரிய காண்ட்ராக்டர். பாலம் எல்லாம் கட்டுபவர். அவசரமாக நான் கிளம்ப வேண்டியிருந்தது. இருந்தாலும் அவரோடு பேசி புத்தகங்களிலும் கையெழுத்திட்டு அனுப்பினேன். ஒரு மணி நேரம். பிறகு அவர் எனக்குப் பல மெஸேஜுகள் அனுப்புவார். எல்லாம் forwarded messages. சரி, நட்பாக இருக்கிறாரே என்று கூச்சம் தளர்ந்து ஒருநாள் துணிந்து, சாருஆன்லைனுக்கு சந்தா அனுப்புங்களேன் என்று மெஸேஜ் போட்டேன். அதோடு அவர் தொடர்பு நின்று விட்டது. அடப் பாவிகளா, இது எப்படி இருக்கிறது என்றால், வேசியிடம் போய் வேலையை முடித்துக் கொண்டு, காசு இதோ ஏடிஎம்மிலிருந்து எடுத்துத் தருகிறேன் என்று ஏமாற்றி விட்டுப் போவதைப் போல. அப்டீன்னா எழுத்தாளன் வேசியா என்று கேட்கக் கூடாது. வேறு நல்ல உதாரணம் எனக்குத் தோன்றவில்லை.
லட்சுமி நாராயணன், நீங்கள் ஒன்றும் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஏற்கனவே சாரு ஆன்லைனுக்கு சந்தா அனுப்புபவராகவும் இருக்கலாம்; அல்லது மாணவராக இருக்கலாம். மாணவர்களிடமிருந்து நான் காசு வாங்குவதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்றே சொல்கிறேன்.
ஸ்ரீராமானுஜரின் கதை தெரிந்திருக்கும் உங்களுக்கு. திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் கேட்பதற்காக வந்தார் ராமானுஜர். திருவரங்கத்திலிருந்து வந்திருக்கிறார். இரண்டு ஊருக்கும் 110 கி.மீ. தூரம். அந்தக் காலத்தில் நடந்துதான் வர வேண்டும். நம்பியோ அப்புறம் வாரும் பார்க்கலாம் என்று ராமானுஜரைத் திருப்பி அனுப்பி விட்டார். இப்படியே 18 முறை அலைய வைத்து விட்டு அப்புறமாக மந்திரத்தைச் சொன்னார். அப்படி அரிது அரிதாய் வாங்கிய மந்திரத்தை ஊர் உலகத்துக்கெல்லாம் இலவசமாகவே கொடுத்தார் ராமானுஜர். அந்தக் காரியத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சிரமப்பட்டு முயன்றால்தான் தங்கும். இல்லாவிட்டால் போய் விடும்.
அதிலும் பல நூறு ஆண்டுகளாக, கணக்குத் தெரிந்தே 2000 ஆண்டுகளாக எழுத்தாளர்களைப் பட்டினி போட்டுக் கொன்ற தமிழ்ச் சமூகத்தில் சன்மானமும் வெகுமதியும் கேட்கும் பழக்கத்தை நான் தான் முதல் முதலாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai