சென்ற மாதத்தில் ஒருநாள் பூனைகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது பக்கத்துக் குடியிருப்பில் வசிக்கும் நான்கு பூனைக் குட்டிகள் செட்டாக என் குடியிருப்புக்கு வந்து உணவு கேட்டுக் கெஞ்சின. எங்கள் குடியிருப்பில் ஸிஸ்ஸி, புஸ்ஸி (இரண்டும் பெண்), ரௌடி (எந்த வம்புதும்புக்கும் போகாமல் மற்ற பூனைகள் கடித்தாலும் வாங்கிக் கொண்டு சாதுவாக இருப்பதால் அதற்கு ரௌடி என்று பெயர் வைத்தேன்), டெட்டி (குட்டி), குண்டு, ப்ரௌனி (இந்த ப்ரௌனிக்கு ஊளை என்ற செல்லப் பெயரும் உண்டு; சாப்பிட்டு முடித்து விட்டு ஒரு ஊளை இடும்; இல்லாவிட்டாலும் அடிக்கடி ஊளையிட்டுக் கொண்டே இருக்கும்; நன்றாக அவதானித்தபோது மற்ற பூனைகள் அதை நெருங்கினால் ஊளையிடுகிறது என்று தெரிந்தது) என்று ஆறு பூனைகள் உண்டு. அப்பு தெருவில் நாங்கள் வாழ்ந்த போது வளர்த்த ச்சிண்ட்டு, ஸ்னீக்கி ஆகிய பூனைகளுக்கும் தினமும் ஒரு பணியாளர் வந்து பூனை உணவை வாங்கிக் கொண்டு போய் விடுவார். நாங்களும் வாரம் ஒருமுறை அவைகளைப் போய்ப் பார்த்து வருவோம். கெய்ரோ எங்களை விட்டு ஓடியது ஓடியதுதான். நாங்களும் விட்டு விட்டோம். அது தனிக் கதை. பெரிய கதை. அது இப்போது வேண்டாம்.
செட்டாக வந்த நான்கு குட்டிகளும் ஒரே தாய்க்கு ஒரே நேரத்தில் பிறந்திருக்க வேண்டும். நான்கும் ஒரே சைஸில் இருந்தன. சூ சூ என்று சத்தம் போட்டு அவைகளை விரட்டி விட்டு விட்டேன்.
அன்று இரவு முழுதும் தூங்கவில்லை. பசியோடு வந்த அந்தப் பூனைகளை ஏன் விரட்டினோம்? இப்போது இருக்கும் எட்டு பூனைகளுக்கும் உணவு வாங்கவே வாசக நண்பர்களைத்தான் கேட்கிறோம். இதில் இன்னும் நான்கை சேர்த்துக் கொண்டால் சமாளிக்க முடியுமா? அன்று இரவே எனக்குத் தெளிவாகப் புரிந்தது, இப்படி யோசிப்பது கேவலம் என்று. என் தர்மத்தை விட்டு விலகி விட்டேன். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்பது வெறும் வார்த்தையா.
காலையிலும் முதல் நாளைப் போலவே அந்த நான்கு குட்டிகளும் செட்டாக வந்தன. அவைகளுக்குத் தனி இடம் ஒன்று கண்டு பிடித்து அங்கே கொண்டு போய் போட்டேன். நான்கும் பேய் மாதிரி சாப்பிட்டன. அந்த நான்கு பூனைகளுக்கும் பெயர் வைக்கவில்லை. எத்தனை பூனைகளுக்குத்தான் பெயர் வைப்பது. ஒரே ஒரு குட்டிக்கு மட்டும் பேய் என்று வைத்திருக்கிறேன். அது மட்டும் என்ன செய்யும் என்றால், எப்போதுமே தன்னுடைய பாத்திரத்தை விட்டு விட்டு அடுத்த பூனையின் பாத்திரத்துக்குப் போய் விடும். பிறகு அதை விட்டுவிட்டு இன்னொரு பூனையிடம் பாயும். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், எப்போதுமே சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். ஒருநாள் வயிறு புடைக்க புடைக்க ஒரு மணி நேரம் சாப்பிட்டது. எவ்வளவு விரட்டினாலும் பயப்படாது. நம்மையே சுற்றிச் சுற்றி வரும். அதனால் அதற்கு பேய் என்று பெயர்.
ஆக மொத்தம் 12. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் பிரகாஷ் என்ற நண்பரைச் சந்தித்தேன். நூறு பூனைகள் வளர்க்கிறாராம்.
சமீபத்தில் ஸிஸ்ஸிக்குத் தலைப் பிரசவம் ஆயிற்று. ஸிஸ்ஸியே குழந்தை. அதற்கு இரண்டு குழந்தைகள். ஸிஸ்ஸிக்கு விவரம் போதாது. சரியான இடத்தில் வைத்துப் பராமரிக்கத் தெரியாமல் மழையில் இரண்டு குட்டிகளும் இறந்து விட்டன. அந்த விஷயம் தெரிந்தபோது அன்று காலையில் நான் கதறிக் கதறி அழுது விட்டேன். குட்டிகள் செத்ததற்காக அல்ல. தாய்ப் பூனையின் வேதனையை நினைத்து. குட்டிகள் செத்து மூன்று தினங்கள் ஆயிற்று. இன்னமும் – இந்தத் தருணத்திலும் கூட – கதறிக் கொண்டிருக்கிறது ஸிஸ்ஸி.
மூன்று தினங்களாக நான் கடவுளுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஸிஸ்ஸியின் துயரத்தை நான் எப்படிக் கடந்து செல்வது? இதையெல்லாம் எப்படி நான் புரிந்து கொள்வது?
***
நண்பர்களே, பூனை உணவு தீர்ந்து போகும் நிலையில் உள்ளது. முடிந்தவர்கள் பூனை உணவை ஆர்டர் செய்யலாம். முடியாதவர்கள் பணமாக அனுப்பலாம். லெபனான் பயணத்துக்கு டிக்கட் போட்டதில் ஒரு கணிசமான தொகை ஆகி விட்டது. எனக்கு மின்னஞ்சல் செய்தால் என் முகவரியும் தொலைபேசி எண்ணும் அனுப்புகிறேன்.
charu.nivedita.india@mail.com
Whiskas cat food Adult 1+ and kitten Both. TUNA
Whiskas cat WET food Tuna sachet packets for kitten
Whiskas cat WET food Salmon sachet packets for adult one plus.
இது தவிர வேறு உணவை இந்தப் பூனைகள் சாப்பிடுவதில்லை.
***
நாகேஸ்வர ராவ் பூங்காவில் மூன்று ஒரே அளவு குட்டிகள் வாழ்ந்து வருகின்றன. மூன்று நான்கு மாதங்களே இருக்கும். அதில் ஒரு பூனை என்னைப் பார்த்ததும் பார்த்ததும் ஓடி வந்து மேலே ஏறிக் கொள்கிறது. உணவும் கேட்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஒரு நாள் கொண்டு போய் கொடுத்தேன். தீரத் தீர சாப்பிட்டது. இத்தனை நட்பான பூனையை நான் இதுவரை பார்த்ததில்லை. பூனைகள் நாயைப் போல் நட்பானவை அல்ல. ஆனால் இது விதிவிலக்காக இருந்தது. இன்றிலிருந்து அந்த மூன்று பூனைகளுக்கும் உணவு எடுத்துப் போகலாம் என்று நினைத்திருந்தேன். மழை நேரத்தில்தான் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவு கிடைக்காது. ஆனால் மறந்து போய் விட்டேன். ஓடி வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. ராகவனும் சேஷனும் நானும் பால் பூத்துக்குச் சென்று ஒரு பால் பாக்கெட் வாங்கிக் கொடுத்தோம். ஆசையாகக் குடித்தது. நாளையிலிருந்து உணவு எடுத்துப் போக வேண்டும்.
இதை விட வாழ்க்கையில் வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும் என்று தெரியவில்லை.
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai