ஊரெல்லாம் சொல்கிறதே, படித்து விடலாம் என்று அந்தப் புத்தகத்தை வாங்கித் தரச் சொல்லி குமரேசனிடம் சொன்னேன். வாங்கிக் கொடுத்தார். முதல் பக்கத்தை ஆசையுடன் புரட்டினேன். மேற்கத்திய நாடுகளில் ஒரு வகை க்ளப் இருக்கிறது. அதில் பணம் கட்டிச் சேர்ந்து கொண்டால் நம்மை ஒரு தூணில் கட்டி வைத்து சாட்டையால் அடிப்பார்கள். கன்னத்தில் அறைவார்கள். ஊசியால் உடம்பு பூராவும் குத்துவார்கள். இன்னும் பலவித ஆக்கினைகள் செய்வார்கள். இதற்கெல்லாம் நாம் காசு கொடுக்க வேண்டும். ஏதோ எஸ்ஸெண்டெம் கிளப் என்று சொல்கிறார்கள். நம்மூரில் அந்த எஸ்ஸெண்டெம் க்ளப் இம்மாதிரி புத்தகங்களாக இயங்குகிறது. அவ்வளவுதான் மேட்டர். ஒரே பக்கத்தில் ரத்த வாந்தி எடுத்து விட்டு, அந்தப் புத்தகத்தை விற்றுத் தரச் சொல்லி ராம்ஜியிடம் குடுத்திருக்கிறேன். 660 ரூ விலையுள்ள அந்த எஸ்ஸெண்டெம் நூலை எஸ்ஸெண்டெம் விஷயங்களில் ஈடுபாடுள்ளவர்கள் ராம்ஜியிடம் ரூபாய் அறுநூறோ அல்லது அதற்கு மேலேயோ குடுத்து பெற்றுக் கொள்ளலாம். அந்தத் தொகையை நான் என் பயணத்துக்குப் பயன்படுத்திக் கொள்வேன். ஏன் இப்படிக் கஞ்சப் பிசுநாரியாக மாறி விட்டேன் என்றால், பயணம்தான் காரணம். எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நயாபைசாவையும் என் பயணத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இப்போதெல்லாம் அடிக்கடி என் நண்பர் ஒருவரை நினைத்துப் பார்க்கிறேன். ஹிண்டு பேப்பர் நாற்பது பைசா விற்கும் போது அவர் அந்தப் பேப்பரை வாங்கி மாடி வீட்டு மாமாவிடம் கொடுத்து விடுவார். அவர் அதைப் படித்து விட்டு அன்று மாலை 20 பைசாவோடு சேர்த்து அந்தப் பேப்பரைத் திருப்பிக் கொடுத்து விடுவார். ஆக இப்போது அந்த பேப்பர் 20 பைசா. அதை நண்பர் பக்கத்துப் போர்ஷன் மாமாவிடம் கொடுப்பார். அவர் அதைப் படித்து விட்டு பத்து பைசாவோடு பேப்பரைத் திருப்பிக் கொடுப்பார். அப்போது மணி இரவு ஒன்பது மணி. அப்போதே நண்பர் அந்த பேப்பரை எதிர்வீட்டு மாமாவிடம் கொடுத்து ஐந்து பைசா பெற்றுக் கொள்வார். காலையில் கிடைக்கும் அந்தப் பழைய பேப்பரை நண்பர் ஒரு நாள் கழித்துப் படிப்பார். ஐந்து பைசா செலவில். ம்ஹும். கணக்கில் இன்னும் கொஞ்சம் பாக்கி உள்ளது. அப்போதெல்லாம் ஹிண்டு பேப்பர் செம வெயிட்டாக இருக்கும். பழைய பேப்பரைப் போட்டால் ஒரு பேப்பருக்கு ஐந்து பைசா கிடைத்து விடும். ஆக, நண்பர் இலவசமாகவே ஹிண்டு படித்து விடுவார்.
இப்படியெல்லாம் காசு சேர்த்து அவர் என்ன வீடா கட்டினார்? ம்ஹும். அவருக்கு ஒரு கொள்கை. கடன் வாங்காமல் வாழ வேண்டும். அவ்வளவுதான். அப்படியே வாழ்ந்தார். எனக்கு ஒரு கொள்கை. பயணம் செய்ய வேண்டும். இப்போது ஒரு 15 நாடுகள் போய் வந்திருக்கிறேன். டாட்டா சொல்வதற்குள் இதை 150 ஆக ஆக்க வேண்டும். பயண எழுத்தாளர் என்று பெயர் வாங்க வேண்டாம். பிறகு? அதை அப்புறம் சொல்கிறேன்.
ஸீரோ டிகிரி அரங்கில் மாலை நாலரையிலிருந்து இரவு ஒன்பதரை வரை இருப்பேன். கோவில்பட்டி கடலை மிட்டாய், எலந்த வடை எல்லாம் கிடைத்து விட்டது. ஸீரோ டிகிரி அரங்குக்குப் பக்கத்தில் ஒரு கிராமீயப் பொருள் விற்பனை நிலையம் உள்ளது. அங்கே கோங்குரா சட்னி கிடைக்கிறது. நேற்று விலை கேட்டேன். ஒரு பாட்டில் 300 ரூ. நான் என்னதான் மைலாப்பூர்க்காரனாக மதம் மாறினாலும் இன்னமும் என் தெலுங்குத் தொடர்பை விட முடியவில்லை. காரம் என்றால் உயிர். அதிலும் கோங்குராவுக்காக ஏங்குகிறேன். கொஞ்சம் எடுத்து வாயில் போட்டேன். மைலாப்பூர்க்காரர்களால் தொடக் கூட முடியாது. அவ்வளவு காரம். ஆனால் செம ருசி. முடிந்தவர்கள் யாரேனும் அந்த கோங்குரா சட்னியை வாங்கிக் கொடுத்தால் என் பாக்கெட்டில் உள்ள 300 ரூபாயை என் பயணப் பணத்தில் சேர்த்து விடுவேன். ஃபெப்ருவரியில் ஒரு நீண்ட பயணம் – ஒரு அட்வெஞ்சர் ட்ரிப் என்று சொல்லலாம் – இருக்கிறது. வீசாவுக்காகக் காத்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai